பக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

ரசிகமணி டிகேசி



ஏரோ

மீனம்பாக்கம்

12.5.41

நண்பர் பாஸ்கர தொண்டைமான் அவர்களுக்கு,

காரைக்குடியில் நடந்த விஷயங்கள் சம்பந்தமாகவும் மற்ற விஷயங்கள் சம்பந்தமாகவும் தாங்கள் எழுதிய கடிதம் வந்தது. அவ்வளவு அருமையாய் எழுதிய கடிதத்துக்கு உடனே பதில் எழுதியிருக்க வேண்டும். விரிவாய் எழுத வேண்டிய பதிலாச்சே என்று எண்ணி எண்ணி நாள்கடந்துவிட்டது.

இருபதாவது நூற்றாண்டின் இடைப்பகுதியிலுள்ள தமிழ்ப் பேராசிரியர்களின் சரித்திரம் மிகவும் விசித்திரமானது. எப்படி? பூர்வமான புலவர் குழாத்தினர் கம்பரையும் கம்பரைக் கற்கிறவர்களையும் வைதார்கள். அவர்களைத் தங்களுக்குத் தெரியும். பிறகு ஊரோடு ஒக்க ஓடு என்று சொல்லுகிறபடி அனேகம் பேர் கம்பரைக் கற்க ஆரம்பித்தார்கள். சரி அது ஒரு குழாமாய்ப் பெருகிவிட்டது. இந்தக் குழாத்தில் சிலருக்குக் கம்பரைப் புகழ்ந்து கொண்டிருந்தவர்க்கு அவ்வளவாக லாபம் இல்லை என்று கணக்குப் பார்த்ததில் தெரியவந்தது. பெரியபுராணத்தைப் புகழவேணும், சிலப்பதிகாரத்தைப் புகழவேணும், சங்கநூலைப் புகழவேணும் என்று தோன்றிவிட்டது. இதில் ஏதாவது ஒன்றிரண்டில் சார்பு காட்டினாலும் போதும். ஆனால் ஒன்று தமிழைக் குறைக்கவேணும். அதோடு கம்பனும் ரொம்ப மேலே போய்விடக்கூடாது. இந்த எண்ணம் எல்லாம் கம்பர் அபிமானிகளுக்குள்ளே கவிந்துவிட்டது. கம்பர் சம்பந்தமாக நாம் செய்யும் பிரச்சாரம் எல்லாம் ரொம்ப மேலே போகாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற ஆத்திரம் வந்துவிட்டது. ஆகவே இப்போது கம்பருக்கு விரோதிகள்