உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

4 இரட்டைக் காப்பியக் கிளைக்கதைகளின் ஒப்பீடு 4.0 தமிழின் முதல் இரு காப்பியங்களான சிலம்பும், மேகலையும் பின் எழுந்த காப்பியங்களைக் காட்டிலும் அள வில் மிகச்சிறியவை. ஆனால், அவ்விரு காப்பியங்களுமே,பின் எழுந்த காப்பியங்களைக் காட்டிலும் (சிந்தாமணி, பெருங் கதை) கிளைக்கதைகளை அதிக அளவு எடுத்தாண்டுள்ளன. சிலம்பும் மேகலையும் இரட்டைக் காப்பியங்கள், ஆதலால், கிளைக் கதைகளை எடுத்தாள்வதில் சில ஒற்றுமைகளை கொண்டிருந்தாலும், புலவர்களின் ஆற்றலுக்கேற்ப பல வேற்றுமைகளையும் தம்முள் கொண்டு திகழ்கின்றன. 41 இளங்கோவடிகள், சிலப்பதிகாரத்தில் 16 கிளைக் கதைகளையும், சாத்தனார் மேகலையில் 19 கிளைக்கதை. களையும் படைத்துள்ளனர். இவ்விரு காப்பியங்களிலுமே கிளைக்கதைகள் ஒரு நீர்மைப்பட்டதாக அமையவில்லை. 4.2 சிலப்பதிகாரத்தில், மணிமேகலையோடு ஓப்பிடும் போது, கிளைக்கதைப் பகுதி குறைவு எனலாம். மணிமேசு. லையில், சிலப்பதிகாரத்தோடு ஒப்பிடும் போது, மையக் கதைப் பகுதி குறைவு எனலாம். 4.3 மணிமேகலை துறவு பேகம் காப்பியம். காப்பிய ஆரம்பத்தில் துறவுபூண்ட மேகலையைப்படிப்படியாக மனத் தளவில் செம்மைப்படுத்திக்கொண்டே வந்த சாத்தனார்.