________________
108 ஒரு நிகழ்ச்சி மட்டும் குறிப்பிடப்பட்டு, பின்னணி, பாத்திங் சுள். காரண காரியத் தொடர்புகள் போன்றவைகள் வாச கர்களின் ஊகத்திற்கு விடப்படும். சான்று: 5.2.1 கயு: எள்ளறு சிறப்பி னீமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் டீர்த்தோன் 5 இத்துணைக் கதையுள் சிபி மன்னன் வரலாறு கூறப்படுகிறது. ஓபி மன்னன் போற்றப் படுவதற்குக் காரணம், அவன் புற: வினுடைய துன்பத்தை நீக்கியதுதான். இதுவே, அவன் வரலாற்றின் தலையான செய்தி. அதை, இங்குச் சுட்டி புறா சிபி மன்னனிடம் வருவதற்கான காரண காரியங்களு டன் கூடிய பின்னணியை வாசகர்களின் ஊகத்திற்கு விட்டு விடுகிறார் காப்பியப் புலவர். 8.2.2 நிகழ்ச்சி: அறுபொரு ளிவனென்றே யமரர்கணந் தொழுதேத்த உறுபசியொன் றின்றியே யுலகடைய உண்டனையே இங்கு, கண்ணன் உலகினை உண்ட நிகழ்ச்சி குறிப்பிடப்படு. கிறது. திருமால் கண்ணன் அவதாரத்தில் நிகழ்த்திய அற்பு நிகழ்ச்சிகள் பல. அவற்றில் ஒன்று யசோதை வியப்ப, வாயி. னுள் உலகினைக் காட்டியது. அந்திகழ்ச்சியை மட்டும் எடுத். துக் காட்டி, கண்ணன் உலகினை உண்ட காரண காரியத் தொடர்பினையும், தத்துவார்த்தங்களையும் வாசகர்களின் ஊகத்திற்கே வீட்டுவிடுகிறார் புலவர். 5.2.3 மேற்கூறிய இரண்டு முறைகளில் இருந்து சற்று மாறியும் துணைக் கதைகள் அமைந்திருக்கலாம். சில துணைக்கதைகளில், கதைமாந்தர் பெயர்கள் மட்டும் சுட்டப் .