உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

I 10 கூட, பெரும்பாலும் ஓரிரண்டு வரிகளிலேயேச் சொல்லப்படும். மிகச் சிறுபான்மை சற்று அதிகமான வரிகளில் சொல்லம்- படும். பெரும்பாலும், இச்சிறுபான்மை கதைகள் பன்னிரண்டு வரிகளுக்கு மேல் மிகாது, இவைகள் தான். கிளைக்கதைகள் போன்ற தோற்றத்தைத் தந்து நிற்பன. ஆனால், அவைகளின் அமைப்பு கிளைக்கதைகளிலிருந்து அவற்றை வேறுபடுத்திக் காட்டும். ளக சான்றாக, சிலப்பதிகாரத்தில் பத்தினிப்பெண்டிர் எழு- லர் கதையை எடுத்துக் கொள்ளலாம். இவற்றைக் கிளை கதைகளாகக் கொள்வதற்குரிய சூழல் உண்டு. காரணம், அக்கதைகள் கூற்று முறையில் அமைந்துள்ளன. அவ்வேழு கதைகளும், கூற்று முறையில் அமைத்திருந்தாலும், அவற்- றில் முதல் ஆறு கதைகள் கதைப்படுத்தப்படவில்லை என்ற காரணத்தால் துணைக்கதைகளாகக் கொள்ளப்படுகின்றன. ஏழாவது கதை, மற்றக் கதைகளைவிடச் சற்று விரிவாகக் கூறப்பட்டாலும், அது, கதை மாந்தர் பெயர் குறிப்பிடப் யடவில்லை என்ற நிலையிலே கிளைக்கதையாகும் தகுதியை இழந்துவிடுகிறது. அக்கதையை அடிகள் சற்று விரித்துக் கூறுதற்குரிய காரணத்தையும் ஆராயலாம். அத் துணைக் கதை மட்டும் வட்டார வழக்குக் கதையாக இருந்திருக்க லேண்டும். இலக்கியம் நாடு தழுவியது ஆதலால், அதை மற்றப் பகுதியினரும் புரிந்துகொள்ளச் சற்று விரிவாகக்கூறி- யிருக்கலாம். இந்த ஒரு துணைக்கதையின் அமைப்பு மட்டும், மற்றத்துணைக்கதைகளின் அமைப்பில் இருந்து மாறுபட்டுத் திகழ்கிறது. 5.4 துணைக் கதைகளின் வகைகள் : துணைக் கதைகளை மூன்று வகைகளாகப் பாகுபடுத்த வாம். கிளைக்கதை போன்று துணைக் கதைகளும் பலவா றான கதைகளாக வந்தாலும், அவற்றை