________________
115 &ன்று: மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் தாவியனே வடிசேப்பத் தம்பியொடுங் கால்போந்து சோலரணும் போர்முடியத் தொல்விலங்கை கட்டழிந்த சேவகன்சீர் கேளாத சேவியென்ன செவியே திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே இங்கு, மாயவனை வணங்கும் இடைக்குல மகளிர், அவன் ஈரடியால் மூவுலகம் அளந்த செயலையும், இராவணனை வென்றதையும் கூறி, அவனைப் போற்றிப் பரவுகின்றனர். இப்படி பரவுமொழிகளாகவும் துணைக் கதைகள் அமைந்து வீட்டுகின்றன. துணைக்கதைகள் போன்று உவமையாகவும், வர்ணனை. யாகவும்,பரவு மொழிகளாகவும் கிளைக்கதைகள் அமை தில்லை. இப்படி, இயல்பிலும், அமைப்பிலும் கிளைக்கதை- களினின்று, துணைக் கறைகள் மாறி அமைந்துள்ளதால், இவற்றை இணைத்துப் பார்க்காமல், தனித்துக் காணுதல் அவசியமாகிறது. தவிர. கிளைக்கதைகள் போன்று துணைக் கதைகள் காப்பிய உறுப்பாகத் திகழாமல், காப்பிய உத்தி. யாகத் திகழ்வதாலும், அதனின்று இதனைத் தனித்து வகைப்படுத்திக் காணுதல் இன்றியமையாத தேவையா- கிறது. மற்ற இலக்கிய வகைகளில் போற்றப்படாத இவ்- வுத்தி, காப்பியத்திற்கு தரும் பெருமித நடை கருதியும். இவற்றைப் பேணுதல் அவசியமாகிறது.