உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

6 சிலப்பதிகாரத்தில் துணைக் கதைகள் . 6.1 பல்வேறு கதைகளின் ஒட்டுமொத்த வடிவமே காப்பியம். சிலப்பதிகாரம் இதற்கு விதிவிலக்கன்று.கோவ லன் கண்ணகி வாழ்க்கைக் கதையுடன், நாட்டில் வழங்கும் பல கதைகளையும் இணைத்து, ஒருமித்த வடிவமாக்கி சிவப்- பதிகாரம் என்ற காப்பியத்தை யாத்துத் தந்துள்ளார் அடி கள். காப்பியத்தில் மூவகைக் கதைகள் பயின்று வந்தாலும், ஓரே கதையாக வரும் மையக்கதையே காப்பியத்தின் உயிர் மூச்சிழையும் உடலாகத் திகழ்கிறது. அவ்வுடலின் உறுப்- பாகக் கிளைக்க ைதகளும், அவ்வுடலினை அழகூட்டும் அணி களாகத் துணைக்கதைகளும் அமைந்து சிறக்கின்றன.இளங் கோவடிகள், சிலப்பதிகார மையக் கதையைச் சுவையூட்டி அழகூட்ட, 61 துணைக்கதைகளை எடுத்தாண்டுள்ளார். அவர், ஒவ்வொரு துணைக்கதையையும் தனக்கே உரிய இயல்புடன், காப்பியத்துடன் ஒருங்கிணைந்து நிற்குமாறு இடையிடைந்து பின்னியுள்ளார். 6.1 சிலப்பதிகாரத்தில், புராணக்கதை, வரலாற்றுக் கதை, நாட்டுப்புறக் கதை என்ற மூவகைக் கதைகளுமே பயின்று வருகின்றன என்றாலும், புராணக் கதைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுத்தாண்டுள்ளார். மொத்தத் துணைக் கதைகளில், 71·1. புராணக் கதைகளும், 17/. வரலாற்றுக் கதைகளும், 12). நாட்டுப்புறக் கதை-