உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

124 நிகழ்ச்சிகள் இவ்வவதாரத்தில் இடம் பெறுகின்றன. கோல். லன் வாழ்க்கையில் நிகழும் சில நிகழ்ச்சிகள் இராம அவதார் நிகழ்ச்சிகளுடன் ஒத்துச் செல்கின்றன. இராமனைட்: போலவே, கோவலனும் மனைவியுடன் தன் நாட்டைக் துறந்து செல்வது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதனால், இக்கதை நிகழ்ச்சியை அடிகள் உலமையாக எடுத்தா டுள்ளார். பெருமகன் ஏவ லல்ல நியாங்கணும் அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த அருந்திறல் பிரிந்த அயோத்தி போலச் கோவலனைப் பிரிந்த புகாரும் துன்புறுகிறது என இராமன் கதையைக் கோவலன் கதையுடன் அடிகள் அகோக ஒப்பிட் டுக் காட்டியுள்ளார். கவுந்தியடிகள், கோவலன் பெற்றோ. ரையும் உற்றாரையும் பிரிந்து நாடுவிட்டு நாடு வந்த தன் வாழ்வை எண்ணி வருந்தும்போது, 'உனனைவிடத் துன்பம் அடைந்தவன் அல்லலா இராமன். அவன் மனைவியையும் இழந்து அல்லவா அவதிப் பட்டான்" என எடுத்துக் காட்டி ஒப்பீட்டுத் தேற்றும் பகுதியும் கவிநயம் வாய்ந்த இடமாக அமைந்துள்ளது. இராவணனை இராமன் வென்ற அவதாரச் சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி ஆய்ச்சியரின் பரவு மொழியாக நின்று திருமாவைச் சிறப்பிக்கின்றது.இவ்வாறு இராமனைப் பற்றிய கதை நிகழ்ச்சிகள் துணைக்கதைகளாக சிலம்பில் இடம் பெற்றுள்ளன. $ 2.1.3 வாமன அவதாரக் கதை திருமால் மாவலியின் வலிமையை அடக்க, வாமன உரு வெருந்து. தன் சீரடியால் மூவுலகும் அளந்த அவதார மகி வமயை இரண்டு இடங்களில் அடிகள் துணைக்கதைகளாக எடுத்தாண்டுள்ளார். திரண்டமார் தொழுதேத்தும் திருமால்றின் செங்கமல இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடத்தனையே