இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
________________
152 2. மணிமேகலையிலும் சிலப்பதிகாரத்தைப் போல் எடுத்துக்காட்டுக் கதைகளே அதிகம் பயின்று வந்துள்ளன. 32 துணைக்கதைகளில் 13 கதைகள் எடுத்துக் காட்டுக்க ளாகவும், 9 கதைகள் உவமைகளாகவும் அமைந்துள்ளன. இதன்மூலம் அடிகளை விட சாத்தனாருக்குக் துணைக்கதை- களை உவமைகளாகப் படைப்பதில் மிகுந்த விருப்பம் இருந். திருக்க வேண்டும் என்பது தெரிகிறது. இதை, அவர் தகுந்த இடத்தில், தகுந்தசான்றாக உவமைகளை எடுத்துக்காட்டி- யிருப்பதிலிருந்தும் அறிந்துகொள்ள முடிகிறது. 3. சாத்தனார், ஒரு துணைக்கதையைக்கூடப் பரவு மொழிக் கதையாகப் படைக்கவில்லை என்பதையும் இவ் வட்டவணை மூலம் அறியலாம்.