உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

156 8.10 சிலப்பதிகாரத்தில். ஏழு நாட்டுப்புறக் கதைகளே துணைக்கதைகளாகப் பயின்றுவந்துள்ளன. மணிமே மேகலை- யில் மிகக்குறைவாக இரண்டே இரண்டு நாட்டுப்புறக் கதை கள்தான் சாத்தனாரால் எடுத்தாளப்பட்டுள்ளன. இப்படி தாட்டுப்புறக் கதைகளைக் குறைவாகக் காப்பியப் புலவர். கள் எடுத்தாள்வதற்குக் காரணம் உண்டு. புராணக்கதை- களைப் போல் நாட்டுப்புறக் கதைகள் நாடு முழுவதும் அறிந்த கதைகளாக இருப்பது அபூர்வம். நாட்டுப்புறக் கதைகள் பெரும்பாலும் வட்டார வழக்காகவே இருக்க முடி. யும். நாட்டில், எல்லா மக்களும் அறிந்த நாட்டுப்புறக் கதை. கள் மிகக் குறைவாகவே இருக்க முடியும் துணைக்கதைகளில் கதை,படிப்பவர் ஊக்கத்திற்கு விடப்பட்டுள்ளதால், காப்பி- யப்புலவர்கள் நாடறிந்த கதைகளையே எடுத்தாள முடியும். அதனால், இரு காப்பியப் புலவர்களும் மிகக் குறைவான நாட்டுப்புறக் கதைகளையே எடுத்தாண்டுள்ளனர். எடுத்- காண்ட துணைக்கதைகளில் அடிகள் ஒரு கதையையும், சாத்தனார் இரண்டு கதைகளையுமே சற்று விரிவாகக் கதைச் சூழல் அறியும்படி. படைத்துள்ளனர். காரணம், வை நாட்டுமக்கள் எல்லோராலும் அறியப்படாத வட்- டார வழக்கக் கதைகளாக இருந்திருக்க வேண்டும் என்பதே. இதனால் காப்பியப் புலவர்கள் பெரும்பாலும் நாடறிந்த கதைகளையே துணைக்கதைகளாக எடுத்தாண்டுள்ளனர் வன்பது தெரிய வருகிறது. 8.11 சிலப்பதிகாரத்தில், பொற்கொல்லன் ஒரு நிகழ்ச்சி சொல்ல. அது கேட்ட காவலன் அது போன்ற நிகழ்ச்சி ஒன்றை 2.டன் சொல்வதாக ஒரு துணைக்கதை பயின்று வந் துள்ளது. இது போன்ற கதையை மணிமேகலையில் காலை முடியாது. 8.12 சிலப்பதிகாரம் மணிமோலை இரண்டிலும் பின்- னால் எழுந்த பிற காப்பியக் கதைகள் துணைக்கதைகளாக