________________
3.4.3 சக்கரவாளக் கோட்டம் எழுந்த கதை: சுதமதி, மணிமேகலா தெய்வத்திடம். நெடுநகர் மருங்கின் உள்ளோ ரெல்லாஞ் ஈடுகாட்டுக் கோட்ட மென்றல துரையார் சக்கர வாளக் கோட்ட மஃதென மிக்கோய் கூறிய உரைப்பொரு ளறியேன் ஈங்கிதன் காரண மென்னை என வினல, மணிமேகலா தெய்வம் மணிமேகலையும், சுகாகி யும் கேட்க இக்கதையைச் சொல்லுகிறது. இறந்த உயிரை எத்தெய்வத்தாலும் உயிர்பெறச் செய்ய முடியாது உயிர் தன்வினைக்கேற்ப மறுபிறவி எடுக்கும் எனற பெளத்த தத்துவத்தை இக்கதை விளக்கி நிற்கிறது. + புத்த ஜாதகக்கதையில் உள்ள ஒரு கதையின் பொருை ட்டி எழுந்தது இக்கதை. ஒரு பெண் இறந்த தன் மகனை உயிர் பெறச் செய்யுமாறு புத்தனிடம் வேண்டி அழுத்து போல், இங்குக் கோதமை என்ற பெண் சம்பாதி என்ற கெய் வத்திடம் தன் மகன் சாருங்கலனுக்கு உயிர் தரச் சொல்லி அழுகிறாள். சம்பாதி, ஊழி முதல்லன் உயிர்தரின் அல்லது திரியுந் தெய்வம் யாராலும் இறந்த உயிரை மீட்கமுடியாது என்று கூறி அனைத்துத் தெய்வங்களையும் தன் ஆற்றலால் ஒருங்கு கூட்டி அதை நிருபித்துக் காட்டியது. இப்படி அனைத்துத் தெய்வங்களும் ஒரு காலத்தே இவ்விடத்தே கூடியதைப் பிற்காலத்தலர் அறிந்து கொள்ளற் பொருட்டு, மயன் என்னும் தெய்வ தச்சன் எக்கரவாளத்தை நிறுவினான் என்று மணிமேகலா தெய்வம் கோட்டம் தோன்றிய கதையை கூறி முடிக்கிறது இக்கதை, காப்பிய ஓட்டத்திற் குச் சிறிதும் தேவையில்லாத கதையாகும். பௌத்தக் கருத்துக்களைப் பேசுவதற்காகவே சாத்தனார் இக் கதையை எடுத்தாண்டுள்ளார்.