உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இலக்குமி அறிந்திருந்தாள் என்பதை இக்கதை சுட்டுகிறது. இக்கதை. 'பிறவிகள் உண்டு' என்பதையும், அப்பிறவி. கள் வினைப்பயனால் அமையும் என்பதையும், உணர்த்தி நிற்கிறது. இதுவும், பௌத்தக் கொள்கையைப் பேச வந்த கதையேயாகும். தவிர, 'ஒருவர் என்ன நினைவுடன் இறக்- கின்றாரோ அதே நினைவின் பலனை அவர் மறுபிறவியிலும் பெறுவர் என்ற கருத்தையும் இக்கதை உணர்த்துகிறது. காப்பியத் தலைமை மாந்தரான மணிமேகலையின் முற் பிறப்பு வாழ்வைப் பற்றிய கதை என்பதாலும், மேகலை தன் பழம்பிறப்புணர்ந்து, இப்பிறப்பை நல்வழியில் நடத்த இக்கதை துணைநிற்பதாலும், இக்கிளைக்கதையை ஒட்டி கதையாகக் கொள்ள முடிகிறது. 3.4.5 மணிமேகலையின் முற்பிறப்புக் கதை 1: மணிமேகலை, மணிமேகலா தெய்வத்திடம். உன்றிரு வருளால் என்பிறப் புணர்ந்தேன் என்பெருங் கணவன் யாங்குள னென்றலும் அத்தெய்வம் இக்கதையைச் சொல்லுகிறது. ஆனால், இக் யதை முழுக்கமுழுக்க உதயகுமாரனைப் பற்றிப் பேசவில்லை. மேகலை உதயகுமாரன் ஆகிய இருவரும் முற்பிறப்பில் சேர்ந்து அனுபவித்த ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறது. மேகளை முற்பிறப்பில் சாதுசக்கரனை உணவிட்டு உபசரித்தலால் இந் பிறவியின் அதன் பயனாகிய நல்வினையை அனுபவிக்கிறாள் எனக்கதை கூறுகிறது. 'பௌத்த துறவிகளை உபசரித்தல் என்பது சிறந்த நல்வினையாகும் என்று இக்கதை மூவ சாத்தனார் எடுத்துரைக்கிறார். சிற்பிறப்பில் இராகு னாக விளங்கியவன் தான் இப்பிறப்பில் உதய குமாரனாகப் பிறப்பெடுத்துள்ளான் என்று இக்கதை முடிவில் ம மேகலா தெய்வம் கூறுகிறது.