உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரட்டைக் காப்பியக் கிளைக் கதைகளும் துணைக் கதைகளும்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

72 இளமையும் நில்லா யாக்கையும் நில்லா வளவிய வான்பெருஞ் செல்வமும் நில்லா புத்தே ளுலகம் புதல்வரும் தாரார் மிக்க அறமே விழுதுணை யாவது தானஞ் செய்யென5 என்ற பௌத்த மதத்தின் தாரக மந்திரத்தை விசாகையின் வாயிலாகச் சாத்தனார் இயம்புகிறார். இக்கதையின் பயன்- பாடும் தோன்றிய இடத்திலேயே நிறைவு பெற்றுவிடுவதால். இதையும் ஊன்று கதையாகவே கொள்ள முடிகிறது. 3.4.16 பீலிவளை -நெடுமுடிக்கிள்ளி வரலாறு இக்கதை மூன்று பகுதிகளாக மூன்று காதைகளில் பேசப் படுகிறது. ஆபுத்திரனாடு அடைந்த காதையில் முதற் பகுதியும், ஆபுத்திரனோடு மணிபல்லவம் அடைந்த காதை யில் 2வது பகுதியும் பேசப்படுகிறது. தவத்திறம் பூண்டு தருமங் கேட்ட காதையில் இவ்விரு பகுதிகளும் இணைத்துப் பேசப்படுகிறது. இப்படிப் பகுதி பகுதியாகப் பிரித்துப் பேசுவதற்கு எவ்- வித நோக்கமும் இல்லை. முதற்பகுதி சித்திராபதி வாயி- லாக அரசமாதேவி கேட்பதாக அமைந்துள்ளது. பொருத்த. மில்லாத இடத்தில் பொருத்தமில்லாத கூற்றாக இக்கதைப் பகுதி அமைந்துள்ளது. சோழமன்னர் கதையை, சோழ மாதாவிடமே, ஒரு கணிகை கூறுவதாகக் காட்டப்பட்டுள்- ள தில் என்ன சிறப்பு இருக்கிறது? ணமாக 2வது பகுதியை, தீவதிலகை மணிமேகலைக்குக் கூறுகி றது. இத்தெய்வம், புகாரைக் கடல் கொண்டதற்குக் கார- இக்கதையை எடுத்துக்காட்டுகிறது. மன்னன், தொலைந்த தன் மகனைத் தேடி அலைந்து, விழாக்கோள் எடுக்க மறந்தான். தீபகச் சாந்தி செய்யாததால் மணி- மேகலா தெய்வம் கோபமடைந்து, புகாரைக் கடல் கொள்-