82 இரணியன் ராஜ்யத்தையும் ஒப்புக்கொண்டான்," என்ற பழியை நான் ஏற்றுக்கொள்ளலாமா? ஏ ! தமிழ்ப் பெருமக்களே! எனக்குத் தன் டனை இடுங்கள்! ஆரியரை நம்பாதீர்கள்! உங்கள் அறிவை, உங்கள் ஆண்மையை, ஆரியரின் சூழ்ச்சி யில் என்னத்தனையும் ஈடுபடுத்தாதீர்கள்! ஆசியர் களை அகற்றுங்கள். தமிழர் நாட்டைத் தமிழர் காடாக்குல்கள். உங்கள் தமிழ்ச் சக்ரவர்த்தி உங்களுக்காக மாண்டான். ஆரியர் அக்ரமத் திலிருந்து உங்களை மீட்கவே மாண்டான். அவன் o மாண்டதற்கு, ஆரியர் சொல்லும் வேதம், மந்திரம், Vis வ கடவுள் அவதாரம்--காரணமே அல்ல. இவை யனைத்தும் அயோக்கியர்களின் பொய்யுரைகள், அந்தோ! வீரத் தமிழன் மாண்டதற்குக் ணத்தை - அவன் சரித்திரத்தை உண்மையாக எழு தவும். கவிஞர்கள் அஞ்சுவரோ? இன்று வீரத்தால் உகுத்த சக்ரவர்த்தியின் ரத்தத்தின் ஒவ்வொரு துளியும் இன்றைக்கில்லாவிடினும் ஒரு காலத்தில் வீரத் தமிழரை, சுயமரியாதையுடைய தமிழரை உண்டாக்கும் என்ற நிச்சயத்தோடு, இதோ,நான் விடை பெற்றுக் கொள்ளுகிறேன் ! பிற்காலத் தமிழர் களிடம் இக்காட்டை ஒப்படைத்து நஈன் விடை பெற்றுக்கொள்ளுகிறேன். STE காச (கையிலிருந்த கட்டாரியால் குத்திக்கொண்டு இறத்தல்] ---
பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/101
Appearance