பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இரணியன் அல்லது. ணையற்ற வீரன் அத்தியாயம் 1. இடம்: சில்கரரவனம். பாத்திரங்கள்: ப்ரகலாதன், காங்கேயன், சித்ரபானு, [ப்ரகலாதன், காங்கேயன் இருவரும் ஒரு சோலை யை அடைகிறார்கள்] காங்கேயன்:- ப்ரகலாதா! என்ன ரமணீயமான ஸ்ருங் கார வனம்! சக்தனம், அசோகம், சூதம் ஆகிய மரங்களின் தனிர்கள் தென்றனால் அசைவது நம் வரவு கண்டு தமது கரங்களால் ஆலவட்டம் அசைப் யதுபோல் இருக்கிறது. பெண்கள் குறுக்கென்று சிரித்தவுடன் அவர்களின் தாவள்யமான பற்கள் தோன்றி மறைவது போல் முல்லையரும்புகள் வெளித்தோன்றுவதும், பிறகு காற்றால் புதரில் மறை வதுமாயிருக்கின்றன. வித வித புஷ்ப வாசம் தமக் குப் புனகம் உண்டாக்குகிறது. வீரகலாதன்:- காங்கேயர! மிக்க அழகிய சோலை தான்! ஆயினும் என் மனம் மாத்திரம் இங்கில்லை. காங்கேயன்:- அதென்ன? வேறென்ன சிந்திக்கின்றாய்? F. 1.