பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணையற்ற வீரன் 85 வந்து உார். உடனே கூச்சலிட்டார். காவலர் என்னைப் பிடித்துக் கொண்டு போய் உமது தந்தை யின் எதிரில் நிறுத்தி என்னை மானபங்கப் படுத்தினர்ர்சுள். நானொரு பெண் ணென்றும் கருதாமல் உமது தந்தை வாய்க்கு வராத வார்த்தைகளால் திட்டினார். உடனே நான் புலிபோல் பாய்ந்து எனது ஈட்டியையும் உமது தந்தையிடமிருந்து பிடுங்கிக்கொண்டு வந்துவிட் டேன். என்ன இருந்தாலும் அவர் எனக்கு மாம னார் ஆனதினால் அவரைக் கொல்லாமல் வந்து விட்டேன். யகலாதன்:- இவ்வனவும் நடந்ததா? என் ஆருயிர்க் காதலியே! எப்படியாவது தீ தப்பி வந்தாயே, அதுவே போதும். உனக்கு ஏதாவது, ஆபத்து நேர்த்திருந்தால் என்னுயிர் என்னாவது? போகலாம். அரண்மனையில் அனைவரும் விழித் துக்கொண்டிருப்பார்கள். இல்கே நிற்கலாகாது. [இருவரும் போய் விடுகிறார்கள்.]