பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 இரணியன் யை எள்ளத்தனை இழக்கவும் தமிழன் விரும்பமாட் டான். ஆரியர்கள் அனைவரும் அவர்கள் சொல் லும் காராயணன் முதலிய தேவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு வருவதானாலும், என்னை அவர்கள் மனிதத்தன்மையுடன், வீரத்துடன், நேரில் வந்து எதிர்க்கட்டும் என்று அந்த ஆரியர்களை நான் அறைகூவி அழைக்கிறேன். ஆரியர் வஞ்ச நரிகள், பேடிகள், தமது வஞ்சகச் செயலால் இந்த உலகத் தையே தம் வசப்படுத்தலாம். இந்த உலக மக் களை யெல்லாம் தமது மாயவலையிற் சிக்க வைத்து ஒரு குடைக்கீழ் ஆளலாம். ஆயினும் தமிழர்களை ஆரியர் பின்னின்று தாக்கிய விஷயம் மட்டும் இந்த உலகம் இருக்கும் வரைக்கும் அழியாது என்று எண்ணுகிறேன். [சபையினர் கைதட்டல்.] C இது மாத்திரமன்று. என்னை அந்த ஆரியர் கள் சூழ்ச்சியால் கொன்றாலும் கொல்லலாம். ஆயி னும் இரணியன் என்ற வீரத் தமிழன் தனது வீரத் தால் மறைந்தான் என்ற கீர்த்தி உலகுள்ளமட்டும் மறையாது என்பேன். பிற்காலத்தில் ஆரியர்கள் தமிழ் வீரர்களைப்பற்றியும் என்னைப்பற்றியும் பொய்ந் நூ ல்கள் எழுதி இழிவு படுத்தலாம். ஆனால் பிற்காலத்தில் உண்டாக இருக்கும் பகுத்தறிவுள்ள தமிழர்கள் உண்மையை அறிந்துகொள்ளக் கூடு மென்று நம்புகிறேன். உண்மையை எவராலும் மறைக்க முடியாது. உலகில் நாளுக்குநாள் எமது தமிழர்களிடம் வளர்ந்துவரும் பகுத்தறி வைத் தடங்கல் செய்ய எவராலும் முடியாது.