உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ணையற்ற வீரன் கு.சாட்டுவோன்:- தமிழர்களை யெல்லாம் இராக்ஷசர் என்றும், அசுரர்கள் என்றும் பொய்ந் நூல்கள் எழுதியவர்கள் இவர்கள். (பாட்டு - 11) 45. இரணியன்:- ஓஹோ! இரண்டு கைகளையும் வெட்டுக! (மற்றும் நால்வர் கொண்டுவரப்படுகின்றனர்.] கு.சாட்டுவோன்:- இந்த அரசாட்சியைக் கவிழ்க்க ஆன தெல்லாம் செய்து வரும் ரியப் பாதிரிகள் இவர்கள். (பாட்டு --12) இரணியன் :- (கோபமாய்] அற்பர்களே! உங்கள் நாரா யணன் எங்கே? நரிக்கூட்டமே! பேடிக்கூட்டமே! நீங்கள் நாராயணனைப்பற்றிச் சொல்லுகிற பெரு மை என்ன? நீங்கள் செய்யும் வேலை என்ன ! யோசித்தீர்களா? உழைக்காமல் இந்நாட்டு மக் களின் நலத்தையெல்லாம் அபகரிக்க எண்ணும் சோம்பேறிகளே! தூங்கும்போது எம்மைக் கொலை செய்வதுதான் உங்கள் தெய்வ பலமோ? சரி! இவர் களை ஆரியர் சேரியில் கொண்டுபோய் நிறுத்திச் சித்திரவதை செய்யுங்கள். சேனாதிபதியே! நாளைக்கு மாலைப்போதில் நான் இட்ட தண்டனையை நீர் சரிவர நிறைவேற்றி வைப்பீராக. சேனாதிபதி:- சித்தமாயிருக்கிறேன். இரணியன்:- நமது சபையை முடித்துக்கொள்வேரம்.