பக்கம்:இரணியன், பாரதிதாசன்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இணையற்ற வீரன் 67 கூறினாய்? பயனற்றதும் அர்த்தமற்றதுமான இவ் வார்த்தையைக் கூறுவதன் மூலம் ஏன் பெருங்குழப் பத்தை உண்டாக்குகின்றாய்? உன் தந்தையின் கோபத்தைப் பெருக்காதே! சக்ரவர்த்தியும் உனது அருமைத் தந்தையுமான ஒருவருக்கு நீ வாழ்த்துக் கூற என்ன தடை? உனக்கு அடாத வார்த்தை யைப் போதித்தவர் யாரப்பா? ய்ரகலாதன்:- அம்மா! சர்வ லோகத்தையும் அவற்றி லுள்ள எல்லா உயிர்களையும் சிருஷ்டித்தவன் எவனோ, நினைத்த மாத்திரத்தில் எவற்றையும் அழிக்க வல்லவன் எவனோ, எவ்வுயிர்க்கும் உணவு தந்து காப்பவன் எவனோ, அந்த ஸ்ரீமந் நாராய ணன் நாமமே வாழ்த்தத் தகுந்தது! இரணியன்:- (தனது வாளை உருவிக்கொண்டு] அடா மசகமே ! என்ன சொன்னாய்? [ப்ரகலாதனை நெருங்குதல்.] வீலாவதி:- (தடை செய்கிறாள்] நாதா! சிறுவன் அறி யாது சொன்னான். திருந்துவான்.(ப்ரகலாதனைப் பார்த்து] அப்பாடு பொது மக்களும் அரசர்களும் போற்றும் சக்ரவர்த்திக்கு உன்னால் அவமானம் ஏற்படலாமா? யோசித்துப்பார்![இரணியனிடம்] நாதா! இன்று போகட்டும். நாளை இவ்வைபவத்தை வைத்துக்கொள்ளலாம். அதற்குள் நான் பிள்ளைக் குத் தக்கது சொல்லித் திருத்திவிடுகிறேன். மந்திரி:- பெருமானே! அவ்வாறே செய்து பார்ப்போம். அரசர்கள் :- அவ்வாறே செய்து பார்க்கலாம். [அரசர்கள் வணங்கிப்போதல்.]