உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

100 இரத்தக் கண்ணீர் காட்சி 31] [சுகதேவின் மாளிகை. திருசங்கு எதிரே உட்கார்ந்திருக்கிறான். சுகதேவ் பேரானந்தமுடன் பேசுகிறான். சுகதேவ்: நானும் முத்தாயியும் காந்தர்வ மணம் புரிந்து கொண்டோம். என்னை மறக்க மாட்டேன் என்று கடவுள்மேல் சத்தியம் செய்தாள். திருசங்கு: ஆமாம். சுகதேவ்: நந்தவனத்திலே ஓடினோம் - நதியிலே நீராடி னோம்- 'முத்தாயி' என்றேன்; அவள் நாதா என்று கூப்பிட்டாள். கண்ணை அசைத்தாள்--கழுத்துக்கு வைர மாலை! அவள் இடை நெளிந்தது--இரத்தின ஒட்டியாணம் பூட்டினேன்! கொண்டு ஒரு சிரிப்பு சிரித்தாள் -சிங்காரி ! ஒய்யாரி! கண்ணே! மயிலே! கட்டிலரைக்கு வாடி என்றேன். வரவும் இசைந்தாள் ! நகைகளைப் போட்டுக் ஆகா! அதற்குள் விழித்துக்கொண்டேன்!... எல்லாம் கனவு திருசங்கு - எல்லாம் கனவு! திருசங்கு: கனவாகாது தம்பி - இந்தத் திருசங்கு இருக் கும் வரையில்! சுகதேவ்: தங்கமும் வைரமும் தயார் - அதை சங்கிலி யாக்குவதற்கு என் தகப்பனார் சம்மதிக்க வேண்டுமே!-- திருசங்கு: அதற்குத் தான் கொஞ்சம் வேண்டும். சுகதேவ்: கஷ்டமா? கஷ்டப்பட திருசங்கு: ஆமாம். அர்ச்சுனன் பாம்பானான் அல்லியை மணக்க! வேலன், கிழவனானான் வள்ளியை மணக்க !