உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

102 இரத்தக் கண்ணீர் சுகதேவ்: வேதாளம்-ஒரு பெண்ணைப் பற்றிய விஷயம்- வேதாளம்: அப்படியானால் காதல் விஷய மாகத்தா னிருக்கும். சுகதேவ்: ஆகா கண்டு பிடித்து விட்டீரே ! உமது மூளையே மூளை ! இன்னும் சொல்கிறேன் கேளும்- திருசங்குவின் மகள் முத்தாயி, என்னை மனப்பூர்வ மாக காதலிக்கிறாள். வேதாளம்: சபாஷ்! அப்படியா? (வேதாளத்தின் முகத்திலே திடீரென மாறுதல் ஏற்படுகிறது. ளித்துக் கொள்கிறான்.] சமா சுகதேவ்: நானும் காதல் மயக்கத்தில் விழுந்து விட் டேன். அவளோ என்னைத் தவிர வேறு யாரையும் தீண்டேன் தீண்டேன் என்று சபதம் செய்து விட்டாள். வேதாளம்: ஆகா-காதலுக்குத்தான் என்ன மகிமை ! உலகமே காதலில் கட்டுண்டு சுற்றிக் கொண்டிருக் கிறது! அந சுகதேவ்: நான் இப்போது அவளைத் திருமணம் செய்து தீர வேண்டும் - அப்பா-சம்மதிக்க மாட்டார் தஸ்து குறைந்து விடும் என்பார் ! இதற்கு என்ன செய்யலாம் சொல்லும்! வேதாளம்: சிக்கலான பிரச்சினை தான் - பாளையக்காரர் மகன் திருசங்குவின் மகள் இருவருக்கு மிடையே நிறைய வித்தியாசம்! ஆனால் காதலோ தெய்வீக மானது. அதையும் மறுத்துவிட முடியாது!- ஆங்! எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது! சுகதேவ்: என்ன என்ன? திருசங்கு ! நீரும் கேளும் !