உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

104 காட்சி 32] இரத்தக் கண்ணீர் [வேங்கைபுரம் க்க வீரர்களின் பாசரை... மதுக்கிணணங்களும் அதை ஏந்தி நிற்கும் மங்கையர்களும்/ இதழிலே மதுக்கிண்ணங்களை வைத்தபடி அவர்களின் மடி யிலே படுத்திருக்கும் போர் வீரர்கள். வீரர் களின் நிலையே இதுவானால்- சேனாதிபதியின் நிலை எப்படியிருக்கும். பட்டுமெத்தை-- அதிலே சாய்ந்து கிடக்கும் வெற்றிவேலன். தலை தூ முடியாத அளவுக்கு போதை. நாவு எப்படி அசைகிறது என்பதை உணரமுடியாதபடி வெறி யுணர்ச்சி. அவனைச் சுற்றிப் பெண்கள் அவர் கள் மீது சுழலும் அவன் கண்கள். அவனது சிவந்த விழிகளை வெற்றி கொள்ளும் பாவை யரின் பவள இதழ்கள். வேலையும், வாளையும் ஏந்தி களம் புகுந்து பகைவரின் தலைகளைக் கையிலே ஏந்தும் வீரர்கள், மதுக்கிண்ணங்களை ஏந்தி - மலரடிகளை வருடிக் கிடந்தனர். தளபதி வெற்றிவேலனின் பிறந்த நாளாம் அன்று!' அதை அவ்வளவு சிறப்பாகக் கொண்டாடுகிறார் கள். ஆட்டமும், பாட்டும், கூத்தும், கூவலும், காதற்பேச்சும். காமச்சேட்டையும், சேனைத் தலைவனின் பிறந்த நாள் விழாவுக்கு மெரு கேற்றின. 60 a ஆயிரங் கிண்ணம் மதுவும் சரி; உன் அதர பானம் ஒரு துளியும் சரி" என்று வீரர்கள் புகழ்ந்தனர். 46 யானையின் மத்தகம் போன்ற உன் தோளிலே சாய்வது தான் எத்தனை சுகம் எனக்கு" என்று பெருமூச்சு விட்டனர் அழகி கள்.