உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி 8 11 "அப்பாடா!" என்று பெரிய கொட்டாவி விட்டபடி தன் எதிரே கிடக்கும் சிறு, சிறு முடிச்சுகளை எடுத்து உற்றுப் பார்க்கிறான். அவன் உதடுகள் முணுமுணுக் கின்றன. மாய்கைநாத ஸ்வாமிகள்! மாய்கைநாத ஸ்வாமிகள்! மாய்கைநாத ஸ்வாமிகள் ! ஆம். ஒவ்வொரு முடிச்சிலும் எழுதப்பட்டிருக்கிற பெயரைத்தான் அவன் அப்படிப் படிக்கிறான். அதைக் கவனித்த முத்தன், வேதாளத்தைப் பார்த்து, முத்தன்: மாய்கைநாத ஸ்வாமிகளுக்கு சரியான வேட் டைதான் போலிருக்கிறது! வேதாளம்: எல்லாம் பக்தர்கள் அனுப்பும் காணிக்கை கள்! முத்தன் : காணிக்கையா! ஆமாம் ஆமாம் ! உழைக்கா மல் கிடைக்கிற ஊதியத்திற்கு அப்படியும் ஒரு பெயர் உண்டு. வேதாளம்: ஆரம்பித்துவிடாதே முத்தா உன் அதி மேதாவித்தனமான பிரசங்கத்தை! முத்தன்: நான் சாமியாரைச் சொன்னால் தங்களுக்கேன் கோபம் வருகிறது. வேதாளம்: ஏ முத்தா ! இது அஞ்சல் மனை ! பலரும் வரு மிடம் போகுமிடம் ! நீ இப்படி உளறுவது எனக்கு ஆபத்து. இது மாதிரி எதுவும் வருமென்று தெரிந்து தான் உனக்கு என் வீட்டில் ஒரு அறையை வாட கைக்குத் தர அவ்வளவு தயங்கினேன். முத்தன்: சரி ...சரி... வாயை மூடிக்கொண்டேன்.