உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

9 காட்சி--2] அமர்ந்திருக்கிறார். மு. கருணாநிதி 13 (பழுதூர் மடாலயம் தக தகவென மின்னிடும் பொன் மெரு கேறிய பீடமொன்றில் மாய்கைநாத சாமியார் அவரு க் கு அருகாமையி லுள்ள பச்சைப் பட்டு விரித்த ஆசனத்தில் பலதேவர் உட்கார்ந்திருக்கிறார். அவரது காது களில் வைரத்தாலான ஆபரணம் ஒளிவிடுகிறது. சுருண்டு, பிடரிக்கும் கீழே தொங்கும் தலை மயி ரும், காதுகளின் ஓரங்களிலே தூண்களென இறங்கியிருக்கும் ரோமக் கொத்துகளும், சிறிய மீசையும் கொண்ட தேவர் எப்பொழுதுமே சிந்தனையிலாழ்ந்திருக்கும் தோற்றங் கொண்ட வர். அவரது மேனியை ரோஜா நிறத்துச் சொக் காயும், அதன்மீது சிகப்பு வண்ணப் பீதாம்பர மும் அலங்கரித்தபடி யிருக்கிறது. அதுதான் அவர் வழக்கமாக அணியும் அவருக்குப் பிடித்த மான உடை போலும்! பக்கத்திலே அவர் துணை வியாரும், மகன் சுகதேவனும் இருக்கிறார்கள். அவர்கட்குப் பின்னால் சிறிது பணிவுடன் அரண் மனைக் காவலாளி திருசங்கு நின்றுகொண்டிருக் கிறான். சாமியாரின் பீடத்திற்கு நேராக ஊர் மக்கள் குழுமியிருக்கிறார்கள். சாம்பிராணி - ஊதுவத்திகளின் நறுமணம், அந்த இடத்திலே - பக்தி, பிரவாகமாகக் கரை புரண்டோடுவதை விளக்கிக்கொண்ட டிருக்கிறது. சாமியாரின் திரு வாயிலிருந்து எத்தகைய அமுத மொழிகள் உதிரப்போகின்றனவோ என் று அனைவரும் திர்பார்த்த வண்ணமுள்ளனர். GT