உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி 169 சுகதேவ்: அதெல்லாம் யாரும் போகமுடியாது. முத் தாயி-வீணே விளையாடாதே! வா விவாகத்தை இப்போதே முடித்துக்கொள்வோம். முத்தாயி: உனக்குக் கண்ணில்லை...? மனித உணர்ச்சி யில்லை...? பெண் பழி பொல்லாது என்பார்களே: படித்ததில்லை? அதை சுகதேவ் : எதுவும் என் காதில் விழாது! இப்போது நீ என்னை திருமணம் செய்துகொண்டுதான் தீர வேண்டும் ---கண்ணே முத்தாயி ! முத்தாயி ஆக்ரோஷமாக எழுந்து நிற்கிறாள். அவளுடைய களைப்பு, பலஹீனமெல்லாம் எங் கேயோ ஓடிவிட்டது. பேச ஆரம்பிக்கிறாள். முத்தாயி: உம். நான் தயாராயிருக்கிறேன். இந்த சரீரம் தானே உமக்கு வேண்டும்.. என் மேனியின் மெருகிலேதானே நீ மயங்கிவிட்டாய். உம்-அடிமை யாக்கிக்கொள் என்னை ! யாரோ சொன்னாளாமே ; உடல்தான் அழுக்குப்பட்டது, உள்ளம் அழுக்குப் படவில்லை யென்று! அப்படியல்ல நான் சொல்வது. என் கற்பை உன் காலடியில் வைக்கத் தயாராகி விட்டேன். காமவெறியில் பாய்ந்துவரும் கழுகே! உன் கொடிய நகங்களால் என் இருதயத்தைப் பிராண்டிவிடு ! காமபோதையில் கருத்திழ்ந்த காண்டாமிருகமே! என்னை விழுங்கு! பஞ்சணைப் பசியால் கொஞ்சிவரும் மலைப்பாம்பே! வாடிய என் உடலை உன் வயிற்றுக்குள் போட்டுக்கொள் ! உம்- தாமதிக்காதே! சூறையாடு என் கற்பை! சுக்கு நூறாக்கிவிடு என் வைராக்கியத்தை ! பெண்களை