உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

28 171 காட்சி 58] மு. கருணா நி தி [பாளையக்காரர் அரண்மனை கூடத்திலே, பலதேவர், அவர் மனைவி, மாய்கைநாத சாமியார் ஆகியோர் வருத்தமாக அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் பேசுவதை மாளிகையின் மேலேயுள்ள கூடத்துப் பலகணி வழியாக கவனித்துக்கொண்டிருக்கிறாள், பூங்கா வனம். சாமியார்: எனக்கென்னமோ - சுகதேவ் திரும்பிவருவது சந்தேகமாகி விட்டது. பலதேவர்மனைவி: அய்யோ- என் மகன் வரமாட்டானா? நான் என்ன செய்வேன். சாமியார்: விதி-நம் விழிகளையும் மூடிவிடும். சுகதேவ், எதிரே நின்றால்கூட நம் பார்வைக்குத் திரைபோட்டு விடும் பயங்கர சக்தி வாய்ந்தது அந்த விதி. மேலே பலகணியிலிருந்தபடியே, பூங்காவனம்: உம், ஆரம்பமாகி விட்டது, விதிக்கு விளக்கம், அண்ணா -நீங்கள் சாமியாரை நம்புகிறீர் கள். சாமியார் பாவம் விதியை நம்புகிறார்... விதி, சாமியாரை நம்பி வாழ்கிறது - இப்படி சக்கரம்போல விதி, சுற்றிக்கொண்டே யிருந்தால், சுகதேவும் எங் கேயாவது சுற்றிக்கொண்டே தானிருப்பான். சாமியார்: அவசரக்காரப் பெண்கள்... பூங்காவனம்: ஆமாம் சாமியாரே அது முழுக்க முழுக்க உண்மை!-- நான் அவசரக்காரிதான்!- காரியேதான்! அவசரக் பலதேவர்: (மேலே பார்த்து) பூங்காவனம் போதும் நிறுத்து!