உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

176 இரத்தக் கண்ணீர் இந்த மாய்கைநாத சாமியார் ஒருநாள் இரவு கூப்பிட்டார். ஓடிவந்து என்னை அவசரமாகக் ரகசியம் ஒன்று! அதை மறைத்துவிட வேண்டுமென் றார். வந்தேன். அழைத்து வந்தார் என் கண்களை வழியிலேயே கட்டி விட்டார். மறுத்தேன். பொன் மூட்டையொன் று வழங்கினார். ஒத்துக்கொண்டேன். எங்கே அழைத்துப் போகிறார் என்று தெரியவில்லை. கண் கட்டப்பட்டேயிருந்தது. ஏதோ படிகளில் ஏறி- என்னை அழைத்துச் செல்வது தெரிந்தது. படிகளை கவனமாக எண்ணிக் கொண்டேன். முப்பத்தாறு படிகள் ! நன்றாக ஞாபகமிருக்கிறது. ஒரு இருண்ட அறையில் மங்கலான வெளிச்சத்துக்கிடையே என் கண்கள் அவிழ்த்து விடப்பட்டன. எந்த இடமென்று தெரிந்துகொள்ள சுற்று முற்றும் பார்த்தேன் - இதோ இந்த மூன்று சிலைகளும் அப்போதும்இருந்தன. மான்தே தால் காதற் புறாக்கள் - கன்று நாடும் பசு- வேங்கை - ஆம் இவைகளேதான்! கட்டிலில் ஒரு பெண் படுத்திருந்தாள். அவள் முகம் கறுப்புத்துனி யால் நன்றாக மூடப்பட்டிருந்தது. பிரசவ வேதனை யால் அவள் துடித்துக் கொண்டிருந்தாள். இன்னும் சிறிது நேரத்தில் இறந்துவிடுவாள் போல் தோன் றியது. பிறகு நான் மருத்துவம் செய்தேன். அழகான குழந்தை. குழந்தையை உடனே சாமியார் காவேரி என்பவளிடம் கொடுத்துவிட்டார். காவேரி குழந் தையுடன் ஓடி விட்டாள். மீண்டும் என் கண்கள் கட்டப்பட்டு வீட்டில் கொண்டுவந்து விடப்பட்டேன் - பிறகு காவேரியிடம் - அந்தக் குழந்தை வளர்ந்ததும் அந்தக் குழந்தைதான் முத்தன் என்பதும் எனக்குத் தெரியும். பிறகு நான் வெளிநாடு போய்விட்டேன்.