உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

182 காட்சி 60] இரத்தக் கண்ணீர் சுக பலதேவர், பூங்காவனம், சாமியார், தேவ், முதலியோர் வரும் பல்லக்கு வண்டிகள் வேகமாக வருகின்றன. அவர்களின் வேகத்தைப் பார்த்தால் கட்டாயம் முத்தனை மீட்டு விடுவார் கள் என்றே தெரிகிறது.

தூக்குமேடையை நோக்கி முத்தன் அடி யெடுத்து வைக்கிறான். அவன் கடந்த பாதையை இனி மீண்டும் பார்க்கவே முடியாது. தூக்கு மேடை அவனை வாய்பிளந்து வரவேற்கிறது, தூரத்திலே - தன்னை மறந்து, முத்தாயி காதல் கீதத்தைப் பாடிக்கொண்டே யிருக்கிறாள், அப்பப்பா-அவள் தான் பாடுகிறாளா? சோகமே யாமாக உருவெடுத்து இசை பொழிகிறதா? இந்த கீதத்திலே மனதைப் பறிகொடுத்தபடியே முத்தன் நடக்கிறான். அவன் முகம் மூடப்படு கிறது. உலகம் மறைந்துவிட்டது அவனுக்கு ! 'தடார்' என ஒரு சப்தம். அந்த சப்தம் முத்த னின் உயிரைப் பிரித்துக்கொண்டு போய் விட்டது. இனி அவனுக்கு எதைப்பற்றியும் கவலையில்லை. ஏழை முத்தன் இடர் நிறைந்த உலகை விட்டு விடுதலைபெற்று விட்டான்.