உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

95 முடிவு ? இப்போது புரிகிறதா - பலதேவர் ஏன் அப்படி நிற்கிறார் என்று ! - கதையின் ஆரம் பத்தில் பழுதூருக்கு வாருங்கள் என்று உங்களைக் கூப்பிட்டேனே வந்து பார்த்தீர் களே; பழுதூ ர் கதை எப்படியிருக்கிறது பழு தடைந்த ஊர் -பழுதூர்! பழுதூரின் பாளையக் காரரும் பழுதடைந்த குடும்பத்தின் நிலைமையை நினைத்துத் தான் அப்படி நின்றுகொண்டிருக் கிறார். தவறு செய்வதற்கு முன்பு. -தங்கள் மதிப்பையும்,பெருமையையும் உணர்ந்து பார்க்க முடியாதவர்கள் உலகத்தின் முன்பு தலைகுனியத் தான் வேண்டும். --- பலதேவர் கண்ணீர் விடவில்லை. ஆனால் அவர் இருதயம் வடிக்கும் இரத்தக் கண்ணீரை நம்மால் அறிய முடியவில்லை