உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

18 31 மு. கருணாகிதி பலதேவர்: நலந்தான்! படியோ! மன்னர் நலமெல்லாம் எப் வெற்றிவேலன் : நலமே ! ஓலை அனுப்பியது கிடைத்த தல்லவா? பலதேவர்: கிடைத்தது ! ஆனால் அதைக்கண்டு ஆச் சரிய மடைந்தேன். வெற்றிவேலன்; ஏன்? பலதேவர்: ஆயிரக் கணக்கிலே படை வீரர்கள் இருக் கும் போது - வீர தளபதி வெற்றிவேலர் நீங்கள் இருக்கும்போது-வேங்கை நகரத்து சிற்றரசர் யாருக் காக பயந்துகொண்டு படையை இன்னும் பெருக்கு கிறார்? வெற்றிவேலன்: படையைப் பெருக்குவது-பலத்திற்காக அல்ல! பாதுகாப்புக்காக! பலதேவரே ! நூறே நூறு போர் வீரர்கள்தானாம்... உமது தந்தையைத் தோற்கடித்து இந்தப் பழுதூரை கைப்பற்றியவர் கள்! பலதேவர்: அதைத்தான் சொல்கிறேன் நானும். வேங் கை நகரத்து வீரர்கள் தொகையிலே அதிகம் தேவை யில்லை... தோல்வி காணாத சூரர்கள் அவர்கள் !-- வெற்றிவேலன் : என்ன இருந்தாலும் அரசர் விரும்பு கிறார் - படையைப் பெருக்க வேண்டுமென்று! சிறுத் தையூறான் வேங்கை நகரின்மீது எப்போது பாயலாம் எந்தக் காரணம் கிடைக்கும்; களம் அமைக்க-என்று எதிர்பார்த்துக் கிடக்கிறான். அதனால் தான் படை பெருக்கும் முயற்சியில் சிறிதும் தடை கூடாது என நம் மன்னர் உத்திரவிட்டுள்ளார்!