உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

54 ரத்தக் கண்ணீர் கின்றன - சமாதானத்தையா? சமரையா? ஆகவே அன்பர்களே ! போர்வீரர்களாக மாறிடுங்கள் ! சண்டைக்குப் போவோர் அத்தனைபேரும் மாண்டுவிடுகிறார்கள் என்பதில்லை. விதி இருப்பவர் எங்கும் எப்படியும் மாள்வர். வாள் பிடிப்பதால் மட்டுமல்ல, வாழைப்பழத்தோல் சறுக்கி விழுந்து வாழ்வு முடிந்தோர் பலருண்டு. அப்படியே இறந்திடினும் யுத்தத்தில் இறந்தால் வீரசொர்க்கம் விண்ணிலே காத்திருக்கிறது. வீர னுக்கு மண்ணில் மட்டுமல்ல-விண்ணிலும் புகழ் தான். வளைந்துபோன தோள்களிலே வாகைமாலை ஏந்துங்கள் - அதற்காகக் கைகளில் வாளேந்துங்கள்! வேலையில்லாதவர்க்கு வேலை. வாழ்வற்றவர்க்கு வாழ்வு. வீரமுள்ளவர்க்கு விருது. நாடுகாக்கும் நல்லவர்களே! இன்றே சேருங்கள்! ஆண்டவன் துணையிருப்பான்! திருச்சிற்றம்பலம். தெய்வமே துணையென திண்டோள் தட்டிக் கிளம்புங்கள்! திருச்சிற்றம்பலம் - அறநெறி வாழ்க! மக்கள்: திருச்சிற்றம்பலம். கூட்டத்தினர் கலைந்து போகிறார்கள். தள பதியும் சாமியாரும் தனியிடத்தில் சந்திக்கிறார் கள். தளபதி: மிகவும் நன்றி செலுத்துகிறேன்! சாமியார்: கடமையைச் செய்தேன். தளபதி: தங்களைப் போன்ற மடாதிபர்கள் நாட்டுத் தொண்டாற்றக் கிளம்பிவிட்டால் இருண்ட உலகு வெளிச்சமடைந்துவிடும். சாமியார்: முடிந்தவரையில் முயலுகிறேன்.