பக்கம்:இரத்தினமாலை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

________________

33 இரத்னமாலை:- இன்னும் எத்தனை நாள் செல்லும் டாக்டர் : - அடுத்த வாரத்தின் ஆரம்பமே ஊருக்கு வரவேண்டி யது தான். எனக்கு சிலவிஷயம் தெரியவேண்டும். அதை இப்பொ முது கூறமுடியுமா? இரத்னமாக:--ஆ! ஹா!! கூறுகிறேன். என்ன கூறவேண் டும்? டாக்டர்:- அன்றைய தினம் கண்காட்சிக்கு போயிருந்தாயல் லவா ? அந்த விஷயம் உன் ஞாபகத்திலிருக்கிறவரை கூறு, இரத்னமாலை;-ஆ ! அதுவா? எனக்கு பயமாயிருக்கிறது. கினைக்க நினைக்க பயமாகவே இருக்கிறது. டாக்டர் : - அம்மா ! பயப்படாதே. இனி எவ்விதமான ஆபத் தும் ஏற்படாது. இரத்ன மாலை -- நான் அன்றையதினம் மாலை 5-மணிசுமாருக்கு வீட்டினின்றும் அலங்கரித்துக்கொண்டு புறப்பட்டேன். சரியாய் 5-30 மணிக்கு என் அறிமுகமானவளான அங்கயற்கண்ணியை வழி பில் சந்தித்து என்வண்டி பிலேயே ஏறிக்கொள்ளச் சொல்லி அழைத் துக்கொண்டு நாங்களிருவரும் நேரே விக்டோரியா மிமோரியல் ஹாலு க்குச் சென்றோம். அங்கு சிறிது நேரம் அத்தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்து 6-மணிசுமாருக்கு முதல்வகுப்பு டிக்கட்பெற்று இரு வரும் உட்காருமிடங்களுக்குச் சென்றோம். நான் நாடகத்திற்குப் போனாலும் மத்தியபாகத்திலுள்ள ஆசனங்களில் தான் அமருவது வழக்கம். அங்கையற்கண்ணியதைத்தடுத்து என்ன புருஷாளுக்கு அடுத்தாப்போல் கிராதிபோட்டிருக்கிறதே பவ்விடத்தில் அமரும்படி வாசுக் கூறினாள். அவளும் என்னருகிலேயே அமர்ந்தாள். நாங்கள் உள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் காட்சியாரம்பிக்கப்பட்டது. காட்சியில் பார்வையையும் மனதையும் செலுத்திக் கொண்டிருக்கும் சமயம் என்னருகிலிருக்கும் அங்கையற்கண்ணியின் கணவனான ஷண் முகஞ்செட்டியார்வந்து கிராதியிடம் அமர்ந்து எதையோ ஒரு வஸ் திரத்தையெடுத்து அவளிடம் கொடுக்கப்போனார். இவ்வளவேயென க்குத்தெரியும், பிறகு நான் வீட்டிலிருக்கவும், ரெயிலிலிருக்கவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/37&oldid=1278642" இலிருந்து மீள்விக்கப்பட்டது