பக்கம்:இரத்தினமாலை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

________________

விட்டு, அரு சாதாரண வியாபாரியைப் போல் வேடம் பூண்டுகொண்டு ல் என் கெட்டித்த துப்பாக்கியை யெடுத்துக்கொண்டு ஒருவருக் கும் தெரியு விடாமல் மறைத்துக்கொண்டு மாலை மணி இரண்டுக்கே பீப்பில்ஸ்பார்க்கச்சென்று பிரபுக்கள் செல்லும்பாதையருகேபோய் கன்மம் கொண்டி சங்தேன். அதேசமயம் நமது சவுரிமுத்துவும் சகுபதியும் ஒரு பேரச்வண்டியில் வந்து இறங்கினார்கள். இவர்களைக் கண்டும் காணதவன் போல் நான் இவர்களை பின் தொடர்ந்தேன். அச் சமயம் இவர்களிருவகம் ஓரிடத்திலும் அமராமல் அலைந்துகொண்டே யிருந்தனர். நானும் இவர்கள் கிழலைப் போலவேயிருந்தேன். இவர் களுக்கு அங்கு என் வேலை யென்பதும், ஏன் ஒரிடத்திருந்து காகி போய் பார்க்காமல் அலைகின்றார்களென்றும் நான் நினைத்தேன். அச்சமயம் நல்ல நல்ல உடையுடுத்தின போக்கிரிகளும் திருட்டுபயல் களும் இவ்விருவரையும் சந்திப்பதும் ஏதேதோ சடுதாசிகளில் பொ தியப்பெற்ற பொட்டனங்களைக் கொடுப்பதும் போவுதுமாக இருந் தார்கள். இவ்விஷயத்தில் எனக்குக் கொஞ்சம் சக்தேகம் ஏற்பட்ட தெனினும் நாணமா யறிய ஆவல்கொண்டிருந்தே னாதலால் அவசரப் படாமல் கவனித்து கொண்டே சென்றேன். அன்றிரவு மணி பதி னொன்றுக்குமேல் இவ்விருவரும் புறப்பட்டு மூர்மார்கெட்வழியேசெ ல்வதற்குப்பதிலாக சால்ட்கொட்டார் வழியாக திரும்பினார்கள், இவா களைத் தொடர்ந்தே நான் சென்றேன். மிருகங்கள், வைக்கப்பட்டி ருக்கும் இடத்தண்டைவந்ததும், ஐந்தாறு பேர்கள் நின்றுக்கொண்டி ருக்கக் கண்டேன். எனக்கு இச்சந்தர்ப்பத்தில் ஒருவித ஊக்கமும் பதைபதைப்பும் உண்டாயிற்றெனினும் சிறிது நிதானித்து அடுத் தாப்போலிருந்த ஒரு பெரிய மரத்தின பிரானால் பதுங்கி நின்று கொ ண்டுபார்த்தேன். இதேபமயம் ஒரு ஸ்திரீ இழே விழுந்திருந்தாள் மூச்சுப் பேச்சு ஒன்றும் இருப்பதாகத் தெரியவேயில்லை. அவள் மீதிருந்த நகையெல்லாம் கழற்றி விடப்பட்டிருந்தது. அங்கிருந்த வர்களெல்லாம் சவரிமுத்துவின் ஆள்கள் என்பதையும் ஸ்திரீயைக் களவாக தூக்கிவந்து அவளது நகைகளை கழட்டிக்கொண்டு கொன்று விடுவதற்காக ஆலோசித்துக்கொண்டிருந்தனர். அதேசமயம் நானும் என் கைத் துப்பாக்கியை கையில்வைத்துக் கொண்டேன். அப்போ து சவரிமுத்து தன் கையில் ஒரு கட்டாரியை யெடுத்து கீழ்விழும் திருந்த பெண்ணை குத்த ஒங்கினான். நான் தாமதித்தால் மோசமாய் விடுமென்றெண்ணி என் கையிலிருந்த துப்பாக்கியைச் சவுரிமுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரத்தினமாலை.pdf/44&oldid=1278635" இலிருந்து மீள்விக்கப்பட்டது