பக்கம்:இரவீந்திரநாத தாகுர் எண்ணக் களஞ்சியம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170

இரவீந்தரநாத தாகுர் - எண்ணக் களஞ்சியம்


பயனற்றவை யாவற்றையும் புறந்தள்ளி விட்டு உனது பரபரப்பான அடிகள் உலகின் புழுதியை முத்தமிடுகின்றன.

-நா

ன்னுடன் இணைந்து என் நெஞ்சத்தில் வாழ்கிறான் என் இறைவன்.

-க.கொ

சைந்தசைந்து ஒளி சிந்தும் சிலம்புகள் கண்ணுக்குப் புலப்படாத கால்களைச் சுற்றிக் கொண்டு எழுப்பும் ஒத்திகைக் கட்டு என் எண்ணங்களுக்கு எழுச்சி யூட்டமளிக்கிறது.

-நா

வளிடம் நிலைத்திருத்தல் என்பது மகிழ்ச்சி கொண்டு இருபாதிகளாகப் பிரிந்துள்ளது. தன்னுள்ளே அடங்காமல் அன்பாகிற நோவாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது இந்த மகிழ்ச்சி.

-க.கொ

ர் உலகிலிருந்து மற்றோரு உலகுக்கும், ஓர் அமைப்பிலிருந்து மற்றோர் அமைப்புக்கும் ஆரவாரத்துடன் இடியோசையுடன் வரும் வெள்ளத்தின் சீற்ற ஒலியை நான் கேட்கிறேன். அந்த ஓசை தன்னுடனே துயரங்களையும் -