உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரவும் பகலும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 இரவும் பகலும் அப்படி இருப்பதற்குரிய முயற்சியை நீ செய்ய லாமே!" அப்படி ஏழையேனால் செய்ய இயலாது அப்பனே! நீயாகத் திருவுள்ளம் கொண்டு என் நெஞ்சத்து உன் தாள் எழுதி வைத்தால்தான் அது அங்கே நிலைநிற்கும். << S இன்னும் சில நாட்கள் செல்லட்டும். இந்தப் பிறவி ஒழிந்த பிறகு எழுதி வைக்கிறேன். ஐயோ! அது வேண்டாம். இம்மையிலேயே உன் தாளை என் நெஞ்சத்தில் எழுதிவிட வேண்டும். வெம்மை யான சொல்லும் செயலுமுடைய நமனுடைய ஏவலாளர் மிகுதியாக வந்து என் உடம்பை விழுத்துவதற்குமுன் இப் போதே அந்தக் காரியத்தைச் செய்தருள வேண்டும்."

"அப்புறம் செய்தால் என்ன ?" "இப்போது நீ இதனைச் செய்யாமல் விட்டுவிட்டால் அப்புறம்,இப்பிறவி முடிந்தவுடன், அம்மையில்,அடியே னுக்கு அருள் செய்கிறது என்பது என்ன உறுதி? அப்படி அருள் செய்கிறாய் என்பதை ஆர் அறிவார்? அப்பர் இறைவனை நெருங்கிப் பேசுகிறார்."சுவாமி, இப்போதே என்பேரில் எல்லாவற்றையும் எழுதிவைத்து விடுங்கள். பிறகு செய்கிறேன் என்றால் அப்போது நீர் செய்வது என்ன நிச்சயம்?" என்பது போலச் சொல்கிறார். "நான் என் நெஞ்சத்திலே திருவடியை எழுதி வைக்கும்படி சொன்னது முத்தி பெறுவதற்கு மாத்திரம் அல்ல. அது மாத்திரம் என் குறிக்கோளானால் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்று இருப்பேன். இந்த உடம்பை விட்டு ஒழியும்போது நமன் தமர் வந்து செய்யும் கொடுஞ் செயல்களைத் தாங்க இயலாது. அந்தந் துன்பம் என்னைச் சாராமல் போகவும் அத் திருத்தாள் பாதுகாப்பாகும். ஆதலின் அவர்கள் வருமுன் என் நெஞ்சத்தில் நின் தாளை எழுதி வைக்கவேண்டும்" என்று கேட்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவும்_பகலும்.pdf/95&oldid=1726839" இலிருந்து மீள்விக்கப்பட்டது