88 இரவும் பகலும் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்குச் சிவக்கொழுந்து என் பது திருநாமம். தன்னை வழிபட்டாருக்கு முத்தி தரும் பொருட்டுச் சிவபெருமான் சத்தி முற்றத்திலே எழுந்தருளி யிருக்கிறான். செம்மை தருசத்தி முற்றத் துறையும் சிவக்கொழுந்தே! எத்துணை ஆற்றல் உடையவர்களாக இருப்பினும் யமனுக்கு முன் அவர்களுடைய ஆற்றல் செல்வதில்லை. மிகப் பெரியவர்களும் இறைவனிடம், "அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்" என்று சொல்வார்கள். அப்பர் சுவாமிகளோ, "அப்போது நீ வந்து இது செய்வாய் என்ற உறுதி எனக்கு இல்லை. அதை இப்போதே செய்துவிடு. நீ என் நெஞ்சத்து உன் திருவடியை எழுதி வைக்க இப்போது ஒரு தடையும் இல்லையே!" என்று முன்கூட்டியே பாதுகாப்புச் செய்துகொள்ள நினைக்கிறார். வெம்மை நமன்தமர் மிக்கு விரவி விழுப்பதன்முன் இம்மைஉன் தாள்என்றன் நெஞ்சத்து எழுதிவை; ஈங்குஇகழில் அம்மை அடியேற்கு அருளுதி என்பதுஇங்கு ஆர் அறிவார்? செம்மை தருசத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே! [வெம்மைக் குணமுடைய யமனுடைய ஏவலாளர் மிகுதியாக வந்து என்னை அடைந்து உடம்பை வீழ்த்துவதற்கு முன்னாலே இந்தப் பிறவியில் இப்போதே நின் திருவடியை அடியேனுடைய நெஞ்சத்தில் எழுதிவை; இப்போது எழுதாமல் விட்டால், அம்மை யில் அடியேனுக்கு அருள செய்வாய் என்பதை இங்கே ஆர் அறி வார்கள்? வீட்டை அருள்கின்ற சத்தி முற்றத்தில் எழுந்தருளிய சிவக்கொழுந்தே! தமர் - சார்ந்தவர்; யமதூதர். விழுட்பது - விழச்செய்வது. இம்மை - இப் பிறவிஈங்கு - இப்போது. - இகழில் - செய்யாது விட்டால். அம்மை - இப் பிறவிக்குப் பின் உள்ள வாழ்வு. அருளுதி - அருள்வாய். தெம்மை . முத-1 இது 96-ஆம் பதிகத்தின் அறு 47277
பக்கம்:இரவும் பகலும்.pdf/97
Appearance