பக்கம்:இரவு வரவில்லை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. கோலெடுத்தால்...!


கடைத்தெருவின் கோடியிலோர் குரங்கை யாட்டி
கைத்தடியாற் பூமியிலே தாளம் போட்டான்;
மடையுடைந்த மேட்டுவயல் நீரைப் போல
வாய்திறந்தான்; ‘தாம்தாம்தை’ எனுமி சைத்தேன்
கடைவாயில் வடிந்தின்பம் ஊட்டிற் றங்கே!
கன்னியைப்போல் உடைதரித்த குரங்கங் கொன்றே
இடைநெளித்துக் கண்சுழற்றிக் கையை நீட்டி
எதிராடும் இணையுடனே ஆடக் கண்டேன்!
1


தாழ்ந்ததலை பசைத்தசைத்துப் பேய்வாய்ப் பட்ட
தடிப்பெண்ணைப் போல்மற்றோர் குரங்கு வந்து
வீழ்ந்தெழுந்து நிலைதவறி யாடிற் றங்கே!
மீறிவந்த சிரிப்போடும் இன்பம் பொங்கச்
சூழ்ந்திருந்த மாந்தரெல்லாம் காசைத் தந்தார்:
சொக்கிவிட்டேன்! என்சொல்வேன் கலையி னூற்றை!
ஆழ்ந்தமனக் குரங்கறிவுக் கோலெடுத்தால்

ஆடுமடா சொன்னபடி ஆடுந் தானே!
2

51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரவு_வரவில்லை.pdf/59&oldid=1180129" இலிருந்து மீள்விக்கப்பட்டது