பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூமியின் துணைக்கோள்கள்

89


இப்பொழுது மூன்றாவது நிலை மோட்டார் செயற்படத் தொடங்கியது. இதன் இயக்கம் நிற்கும் தருணத்தில் அது ஸ்புட்னிக்கை வானவெளியில் தூக்கி எறிந்தது. அதன்பிறகு ஸ்புட்னிக் தனியாக வளி மண்டலத்திற்கு மிக உயரத்தில் ஒலியின்றி வேகமாகச் சுற்றத் தொடங்கியது. இனி, இந்தச் சிறிய துணைக்கோள் பூமியின் மீது விரைவாக விழுவதற்குக் காரணமே இல்லை. அப்படி விழுமென்று நினைத்தால் அது நமது தலையின்மீது ஒருநாள் சந்திரனே விழுந்து விடும் என்று நினைப்பது போலாகிவிடும்.

சந்திரன் செல்லும் அயனப்பாதை பூமியிலிருந்து கிட்டத்தட்ட 2,38,000 மைல் உயரத்தில் உள்ளது. அந்த உயரத்திடல் மணிக்கு 2,000 மைல் வேகத்திற்குச் சற்று அதிகமான வேகமே பூமியின் ஈர்ப்பு ஆற்றலை ஈடு செய்வதற்குப் போதுமானது. ஆனால், பூமிக்குமேல் ஸ்புட்னிக்குகள் செல்லும் 100 மைலுக்கும் 3,000 மைலுக்கும் இடைப் பட்ட உயரங்களில் மணிக்கு 18,000 மைல் வேகம் தேவைப்படுகின்றது. ஏனெனில், ஒருவர் பூமிக்கு அருகே நெருங்க நெருங்க ஈர்ப்பு ஆற்றலின் வன்மை மிக அதிகமாக உள்ளது.

நாம் எவ்வளவுக் கெவ்வளவு தொலைவாக (உயரமாக)த் துணைக்கோள்களை அனுப்புகின்றோமோ அவ்வளவுக் கவ்வளவு அவை அதிகமாகப் பயன்படுகின்றன என்பது வெளிப்படை. ஸ்புட்னிக்-1 தோன்றுவதற்கு முன்னதாகவே பூமிக்கு அருகிலுள்ள நிலைமைகளைப்பற்றி ஏராளமான தகவல்களை அறிந்திருந்தோம். ஆனால், வளி மண்டலத்திற்கு அப்பாலுள்ள நிலைமைகளைப்பற்றி ஒரு சிறிதும் நமக்குத் தெரியாதிருந்தது. நாம் துணைக்கோள்களை மிக உயரத்திற்கு அனுப்பினால், அவை அங்கேயே