பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராக்கெட்டின் கதை

15


டன் கனமுள்ளனவுமான "வி-2" இராக்கெட்டுகள் செருமெனியிலிருந்து உருமிக்கொண்டு கிளம்பின. ஏறக்குறைய மணிக்கு 3,000 மைலுக்கு மேல் வேகமாகச் செல்லும் இவைகள் இங்கிலாந்தின்மீது விழுங்கால் அச்சந்தரும் ஆயுதங்களாக அமைந்தன. ஆனால், இங்கிலாந்திற்கு

படம் 5 : வி-2. இராக்கெட்டு

நல்ல காலம். இந்த இராக்கெட்டுகள் யாவும் மிகச் சரியாக அமையவில்லை; அவற்றிலுள்ள கட்டுப்படுத்தும் அமைப்புகள் அவற்றைத் திட்டமிட்ட இலக்குகட்குக் கொண்டு செல்லவில்லை. ஆகவே, பெரும்பான்மையான இராக்கெட்டுகள் யாதொரு சேதத்தையும் விளைவியாமல் ஆங்கிலக்