பக்கம்:இராக்கெட்டுகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

இராக்கெட்டுகள்


செலுத்தப்பெறும் போர்க்கருவிகளில் பயன்படுகின்றது... இதற்கு இராடார் ஆணை வழிகாட்டியைவிட. அதிகத் தளவாடம் தேவையில்லை. ஒரே சமயத்தில் இஃது ஒன்றுக்கு மேற்பட்ட பல ஏவுகணைகளைக் கட்டுப்படுத்துதல் கூடும்தொலைவிற் கேற்றவாறு கற்றையின் அகலம் அதிகரிக்கக் கூடுமாதலால், அனுப்பும் கருவியில் இஃது எவ்வளவுக் கெவ்வளவு குறுகலாக அனுப்பப்பெறக் கூடுமோ அவ்வளவுக்கவ்வளவு குறுகலாக அனுப்பப்பெறுதல் வேண்டும். ஏவுகணை சுடப்பெற்றவுடன் அதே சமயத்தில் அதனைப் பற்றுவதற்காகவும், பற்றின பின்னர் அதனைப் பெருங் கற்றையினுள் (Main beam) நெறிப்படுத்துவதற்காகவும் மிக அகன்ற ஒரு 'சேகரிக்கும்' கற்றை அதே சமயத்தில் அனுப்பப்பெறுகின்றது. இந்தப் பெருங்கற்றையினுள் வானொலிக் கருவித் தொகுதியினால் ஏவுகணை நிலைநிறுத்தப் பெறுகின்றது.

வானத்தினின்றும் - வானத்திற்கு அனுப்பப்பெறும் அமைப்பில் போரிடும் விமானம் தன்னுடைய மூக்கில் ஓர் 'துருவி ஆராயும் இராடார் கருவி'யைக் கொண்டுள்ளதுஅது தனக்கு முன்னாலுள்ள வானத்தையெல்லாம் துலக்கி இலக்கினைக் கண்டறிந்து அதனைவிட்டு விலகாதிருக்கச் செய்கின்றது. போர் விமானம் தனது எல்லைக்குள் வந்தவுடன், ஏவுகணை சுடப்பெற்று இராடார்க் கற்றையின் மையத்தில் வைக்கப்பெறுகின்றது ; உடனே அஃது அங்கிருந்து இலக்கினை நோக்கிப் பறந்து செல்லுகின்றது. அது பகைவனை அழிக்கக்கூடிய அளவு நெருங்கி அண்மையில் வந்ததும் அதனுடைய போரிடும் முனை (War head) அண்மையிலுள்ள ஒரு மருந்து வத்தியால் (Fuse) வெடிக்கப் பெறுகின்றது.