பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 இராச ராச சேதுபதி

284

புட்காதல் செய்யும் பொழிற்றேவை வேந்தன் புலவருக்குத் தட்காத வாயி லுடையான் பகைஞர் தளம்பெரிதென் றுட்காத விரன் சயராச ராது. னுயர் கிரியீர் கட்காதல் செய்கையி ற்ைகுது விட்டுமென் கண்டனிரே.

புள் - பறவை; காதல்செய்யும் - விரும்பும்; பொ ழில் - சோலை : தட்காத - தடைசெய்யாத; தளம் - சேனை, படை; உட்காத - அஞ்சா த கட்காதல் செய் கையினால் - கள்ளை விரும்புதல் செய்யும் ஒழுக்கமுடை மையால்; கை - ஒழுக்கம்; சூதுவிட்டும் - சூதா டலைக் கைவிட்டும்: என் கண்டனிர் - என்ன பயனைப் பெற்றிர். கள்ளும் சூதும் உடன் எண்ணப்பட்ட விதனம் என்க. கள் - வண்டு, வண்டு போன்ற கண்

சூதுவிட்டும் - சூதாடு கருவி போன்ற முலையை வெளிப்படுத்தியும்.

285

ஆ2லயி லேகன்னற் றிரீர் பொழிசெம்பி யாள்பவன்றேன் சோலையி லேபெய்யுங் தேவைத் துறைக்குத் துரைதளவ மாலையி லேபுயம் வாழ்ராச ராசன் வரையணங்கே வேலையி லேயொளிப் பாரே தனத்தினை விட்டவரே.

ஆலை - கரும்பாலை; கன்னற்றி நீர் - கரும்புச்சாறு; செம்பி - செம்பி நாடு; துரை - தலைவன்; தளவ மாலை - முல்லை மாலை : வேலையிலே - தொழி லி லே , ஒளிப்பவர் - ஈடுபடாது நீங்குபவர்; தொழிலிலே ஒளிப்பவரே செல்வத்தைப் பெறாது விட்டவர் என்பது வெளிப்படை. வேல் அயிலே - வேலாகிய அயில்; கண்; தனத்தினை

-- . H. 畢 H விட்டவர் - முலையினை வெளிப்படுத்தியவர்.

28 (3

அடற்கட் செறிந்த கைவேலைக் களிற்றை யறவெறிந்தும் உடற்கட் செறிந்த பெருவேல் பறித்துகக் கோர்குலக்கோன் மடற்கண் ணிறைமுல்லைச் சீராச ராசன் வரையனையிர் கடற்கண் ணிலாம லெழுமலை யித்தனை கண்டிலமே.

அடற்கட் செறிந்த கைவேல் - கொல்லுதல் தன்மை மிக்க சிறியவேல்: களிற்றை அற எறிந்தும் - யானையை இறந்து விழும் வண்ணம் வீசியும்: