ரடிகளில் வீழ்ந்து மன்னிப்புப் பெற்றுக் கொள்; இனியாவது, அவர்கள் மனம் நோகாவண்ணம் நடந்து கொள். பெற்றோர்களைப் பூசிப்பதால், நீ பெரும் பயனை அடைவாய்; இம்மை, மறுமை நலன்களைக் குறைவில்லாமல் பெறுவாய்; சிறிது காலத்திற்குள் கடவுள் அருளைப் பெறுவாய்,’ என்று கூறிப் போயினள்.
பின்னர், புண்டரீகர் குக்குட முனிவரை வணங்கினார். அம்முனிவர் அவரை அன்புடன் ஆசீர்வதித்தார். புண்டரீகர் தம் தாய், தந்தையரை அடைந்து, அவர்கள் மலரடிகளில் வீழ்ந்து வணங்கினார்; தாம் செய்த பிழைகளை மன்னிக்குமாறு வேண்டினார். பெற்றோர் மனம் மகிழ்ந்து, ‘எங்கள் செல்வமே, உனக்கு நற்புத்தி வந்ததைப் பற்றி நாங்கள் சந்தோஷப்படுகின்றோம்!
தாய், தந்தையர்க்கு நற்குணம் வாய்ந்த பிள்ளைகளே சிறந்த செல்வம். நீ நீடிய ஆயுளைப் பெற்றுச் சுகமாக வாழ்வாயாக!’ என்று ஆசி கூறினர்.
புண்டரீகர், தம் பெற்றோரைத் தாமும், தம் மனைவியும் ஏறி வந்த இரு புரவிகள் மீது ஏற்றி, தம் மனைவியுடன் கால் நடையாகச் சென்றனர். எல்லாரும் பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முடிவில் ஊரை அடைந்-
10