உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தார். அவருடன் அவர் நாயும் வந்தது. கனவான் நீரில் விழுந்த குழந்தை அணியும் சட்டை ஒன்றைக் கேட்டார். செவிலித் தாய் உடனே ஒரு சட்டையை எடுத்துக் கொடுத்தாள். அவர், அச்சட்டையையும், குழந்தை விழுந்த இடத்தையும் நாய்க்குக் காட்டி ஒரு சைகை செய்தார். உடனே, நாய் நீரில் குதித்து மூழ்கி விட்டது. நெடு நேரம் வரையில், நாயைக் காணவில்லை. அந்த நாயும், குழந்தையும் நீரில் இறந்து விட்டன என்றே யாவரும் எண்ணினர்.

பின்பு கரையில் இருந்த சிலர், ‘குழந்தையின் பிணத்தையாவது எடுத்து வரலாம்,’ என்று எண்ணிப் படகுகளில் ஏறிப் புறப்பட்டனர்; அவ்வாறு புறப்பட்டுப் போகும் போது, சிறிது தூரத்திற்கு அப்பால், பிரபுவின் நாய் ஏதோ ஒன்றைக் கவ்விக் கொண்டு மேலே வருவதைக் கண்டனர்; உடனே, அதிக வேகமாகப் படகுகளைச் செலுத்தி, அந்நாயினருகில் சென்றனர். நாய், தன் வாயில் இருக்கும் குழந்தையின் கனத்தால், மெல்ல மெல்ல நீந்திக் கொண்டு வந்தது. படகில் இருந்தவர்கள் நாய் நீந்தும் இடத்திற்குச் சென்று நாயையும், குழந்தையையும் படகில் ஏற்றிக் கொண்டார்கள்.

14