உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவன் மனத்தை விட்டு அகலவில்லை. அவன், ‘ஆ! என்ன ஆச்சரியம் ! ஒரு சாதாரணப் புறா என் குளிரைப் போக்கியது! மேலும், என் பசியைத் தீர்க்கத் தன் உயிரையும் இழந்தது! அந்தோ! இத்தகைய நற்குண, நற்செய்கைகள் உள்ள எத்தனையோ பறவைகளை யான் இது வரையில் கொன்று வந்தேனே!’ என்று வருந்திச் சீவகாருணியம் உடையவனாய்க் கூட்டில் இருந்த பெண் புறாவை எடுத்து வெளியில் விடுத்தான்.

உள்ளன்புடைய மனைவி, கணவன் மாண்டபின் உயிருடன் இராள் அல்லவா? உள்ளன்புடைய விலங்குகளும், பறவைகளும் இவ்வாறேயாம். ஆகையால், பெண் புறா, தான் உயிருடன் இருப்பது தகுதியன்று என்று எண்ணி, அந்த நெருப்பில் தானும் விழுந்தது. உடனே, அப்புறாக்கள் இரண்டும் திவ்விய உடம்பு பெற்று, அழகிய விமானத்தில் ஏறிச் சென்றன. இவ்வினோதத்தைக் கண்ணுற்றான் வேடன்.

உடனே அவனுக்கு நல்லறிவு உண்டாய் விட்டது. அவன், ‘அந்தோ! நான் இதுவரையில் பல பாவங்களைச் செய்தேனே! கணக்கற்ற விலங்குகளையும், பறவைகளையும் கொன்று

தின்றேனே ! இப்புறாக்கள் நட்பால், யான் புத்தி அடைந்தேன்! இனி, என் வேட்டைத் தொழிலை விட்டு விடுவேன்; கூலி வேலை செய்தாவது வயிறு வளர்ப்பேன். சீவகாருணியமும், கடவுள் பத்தியும் உள்ளவனாய் இருப்-

42