உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இராஜன் சிறுவர்க்குரிய கதைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கொண்டு நின்றான். அரசர் அவனை அணுகி, “சிறுவனே, எனக்குக் குடிக்கத் தண்ணீர் வேண்டும். இங்கு சமீபத்தில் ஏதேனும் ஊர் இருக்கிறதா?” என்று கேட்டார்.

பையன்: ஐயா, பக்கத்தில் ஒரு கிராமம் இருக்கிறது. அங்குச் சென்றால் நீர் கிடைக்கும்.

அரசர்: பையா, நீ போய் ஒரு பாத்திரத்தில் நீரைக் கொண்டு வா. நான் இங்கிருக்கிறேன்.

பையன்: ஐயா, என் எசமானர் விலை உயர்ந்த இவ்வாடுகளை என் வசம் விட்டிருக்கிறார்; என்னை முற்றிலும் நம்பியுள்ளார். நான் இவற்றை விட்டுச் செல்வேனாயின், சில ஆடுகள் ஓநாய்களுக்கு இரையாகுமே!

அரசர்: அப்பா, நீ வரும் வரையில் ஆடுகளை நான் பார்த்துக் கொள்ளுகிறேன். உன் ஆடு ஒன்றேனும் களவு போகாதபடி நான் காவல் காப்பேன். நீ அச்சம் இல்லாமல் செல்லலாம்.

பையன்: ஐயா, என் கடமையைச் செய்யாமல் யான் செல்லலாகாது. அப்படிச் சென்றால், என்னை நம்பிய எசமானர்க்கு நம்பிக்கை மோசம் செய்தவனாவேன். நீங்கள் சென்று வாருங்கள். ஆடுகள் காணாமற் போனால், என்ன செய்வது? நான் உங்களைக் கேட்க முடியுமா? என் கடமையாயுள்ள வேலையை நான செய்து முடிக்க வேண்டாவா? தயவு செய்து என்னைத் துன்பப்படுத்த வேண்டா.

52