ருடன் இருக்கப் பிரியப்படாமல், தம் மனைவியை அழைத்துக் கொண்டு வேறோர் இடத்திற்குப் போய் விட்டார்.
அவர் பெற்றோரும், தம் கொடிய புத்திரர் முகத்தில் விழிப்பது சரியன்று என்று எண்ணி, வேறெங்கேனும் சென்று உயிர் விடத் தீர்மானித்தனர். அப்போது பலர் காசிக்குச் சென்று கொண்டிருந்தனர். அவர்களோடு, அவ்விருவரும் நடந்து சென்றனர். புண்டரீகரும், தம் மனைவியுடன் காசிக்குப் பிரயாணமானார். அவர், வழியில் நடந்து செல்லும் பெற்றோரைக் கண்டும், மனம் இளகவில்லை. அவரும், அவர் மனைவியும் இரு பரிகளின் மேல் ஏறிச் சென்று, காசிக்குப் பக்கத்தில் உள்ள குக்குட முனிவரின் ஆச்சிரமத்தை அடைந்து, அம்முனிவரைக் கண்டனர். ‘காசி எவ்வளவு தூரத்தில் உள்ளது?’ என்று புண்டரீகர் முனிவரைக் கேட்டார். முனிவர் அது தமக்குத் தெரியாதென்று கூறி விட்டார். அதைக் கேட்ட புண்டரீகர் முனிவரை மிகவும் இழிவாக நினைத்தார்.
அன்று நடு நிசியில் கோரமான உருவத்துடன் மூன்று பெண்டிர், முனிவரது ஆச்சிரமத்தில் நுழைந்து, உள்ளே இருந்த குப்பைகளை அகற்றி, மெழுகிக் கோலமிட்டனர்.
6