பக்கம்:இராஜேந்திரன்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i

கோவிந்தனின் ஆராய்ச்சி {}}

இரத் சொன்னர். என்னிடம் தேவையில்லையென்று சொன் னேன். அவர் கட்டாயப்படுத்தி வைத்துக்கொள்ளச் சொன்னதன் பேரில் ஒரு பையில் போட்டுச் சில் அடையாளமிட்டுக் கொடுக்கும்படி செய்து அப்படியே வாங்கி 16 வருஷங்களுக்கு முன் என் கைப்பெட்டியில் வைத் தேன். அதை இதோ எடுத்து வருகிறேன்; பாருங்கள்.

கோவிந்தன் வேலைக்காரனே விட்டு அப்பெட்டியைக் கொண்டுவரச்சொல்லி தம் முன் திறப்பது நலமென்று சொன்னதன்பேரில் தமது நம்பிக்கையுள்ள ஆளிடம் சாவி கொடுத்து அறையைத் திறந்து அப்பெட்டியைக் கொண்டு வரச் செய்து கோவிந்தனிடமே அப்பெட்டியின் சாவியைக் கொடுத்துத் திறக்கச் சொன்னர்.

கோவிந்தன் தாங்கள் இப்பெட்டியை அடிக்கடி திறப்பு தில்லையோ கடைசியாக எப்போது திறந்தீர்கள்?

ராஜேந்திரன்: நான் இப்பெட்டியை அநேகமாய்த் திறப்ப தில்லை. கடைசியாக எப்போது திறந்தேனென்று ஞாபக மேயில்லே. எப்படியும் நான் திறந்து அநேக வருடிைங்கள் இருக்கலாம். -

கோவிந்தன் பெட்டியைத் திறந்து ராஜேந்திரன் காட் டிய இடத்திலிருந்து சாவி அடங்கிய பையை உடனே எடுத்துவிடமால் பூதக்கண்ணுடி கொண்டு அதிகக் கூர்மை யாய்ப் பார்த்து, பின் அதை எடுத்து அதன்மேல் போட் டிருக்கும் அரக்கு முத்திரையைக் கூர்மையாய்க் கவனித்துப் பார்த்துவிட்டு எடுத்த இடத்தில் வைத்துப் பூட்டி ராஜேக் திரனிடம் கொடுத்துவிட்டுப் பின்வரும் கேள்விகளைக் கேட்டார்.

கோவிந்தன் கோபாலபுரம் வைர நகைகள் அடங்கிய பெட்டியையும் கோட்டுகளேயும் வைத்து ரங்கநாத் பூட் டினதை ராகவன் பார்த்தாரா? இல்லாவிட்டால் யார்

பார்த்தார்கள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/108&oldid=660488" இலிருந்து மீள்விக்கப்பட்டது