பக்கம்:இராஜேந்திரன்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 இராஜேந்திரன்

காரனை ராமனே என்கூட அழைத்துப் போய் விசாரித்த தில் சங்ககாத்தைக் கல்யாணம் செய்துகொள்ள முடியாது என்று லக்ஷ்மி அதிக வருத்தத்துடன் சொன்னதாகவும் அப்படி அவள் தன் இஷ்டத்திற்கு மாருக நடக்கும்படி யாரோ அவளே எப்படியோ பலவந்தப்படுத்துவதாகவும், அதிலிருந்து தப்புவதற்கு மார்க்கம் இல்லை என்றும் ஆகை யால் அவளுடைய துண்டுதலின்பேரில்தான் ரங்கநாத் அவரது ஜாகையை வேருக வைத்துக்கொண்டதாகவும், ரங்கநாத் நோட்டுகளேத் திட்டமாகப் பெட்டியில் வைத்த தாகவும், அப்போது எடுத்துப் போகவாவது அப்புறப் படுத்தவாவது சாவகாசம் இல்லாததால், ரங்கநாத் பெட்டி யில் அப்போது வைத்தது நிச்சயந்தான் என்றும் தெரிந்து கொண்டேன். -

மேலும் ராமன் கபட மற்ற பழைய நாள் மனிதன் ஆத லின் அவன் வார்த்தையில் எனக்கு கிச்சயமும் பிறந்தது. அப்படி லகiமி சொல்லும்படி ஏற்பட்ட காரணம் என்ன வென்று கண்டு பிடிக்க வேண்டும் என்றும், லகஷ்மியும் அவள் தாயாரும் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக இருந்ததாக ராமன் சொன்னதிலிருந்து லகஷ்மியின் தாயா ரைப்பற்றிக் கவனிக்க வேண்டுமென்றும் தீர்மானித்தேன்.

அப்பால் ராஜேந்திரன் கைப் பெட்டி வைத்திருக்கும் அறையின் கதவு அவர் வெளியில் செல்லும்போதெல் லாம் பூட்டி இருப்பதாகவும், ராஜேந்திரன் இல்லாத காலங் களில் பல சமயத்தில் ரீனிவாசன் அவ்வறையில் இருந்த தாகவும் ராமன் கூறியதால், பேச்சுவாக்கில் ராஜேந்திரன் வெளியே போகும்போது அந்த அறையின் சாவியை எவ ரிடமாவது கொடுத்துப் போவதுண்டா என்று, அவரை நான் கேட்டதில், தாம் ஒரு நாள்கூடப் பூட்டாமலும் சாவி யைத் தன்னுடன் எடுத்துப் போகாமலும் போனதில்லை என்றும், தாம் வெளியே போயிருக்கும்போது தம் அறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/247&oldid=660627" இலிருந்து மீள்விக்கப்பட்டது