பக்கம்:இராஜேந்திரன்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ী3 জা §3

தளென்பதை நான் நண்குணர்வேன். நான் நினைத்தபடியே காரியங்களும் அதன் போக்குகளும் இருக்கின்றன. ஏனெ னில் தாங்கள் இவ் வியாபாரத்தில் சிரத்தை யெடுத்துக் கவனிக்க முயன்ற அன்றே பெருந்தொகைகளே இருப்பில் வைக்கக் கூடாதென்று கண்டிதமாய் உத்தரவளித்தீர்கள். அந்த உத்தரவிற்கு நேர் விரோதமாக நான் ஐந்து லட்ச ரூபாய்களே இருப்பில் வைத்தது முதல் குற்றம். தாங்கள் என்இனப்பற்றி எப்படி கினேத்த போதிலும், எனக்குத் தோன்றினதை என் மனச்சாட்சி பூர்வமாகச் சொல்ல நான் கடமைப்பட்டிருக்கிறேன்.

இன்றைத்தினம் சரியாய்ப் பத்தரை மணிக்குக் கோபா லாசாரியார் அண்டு ஸன்ஸார் அவர்கள் கணக்கில் இருந்து நமது பாங்கியில் ஐந்து லட்சம் ரூபாய் அவசரமாய் வாங்கப் போவதாயும், வந்தவுடன் அட்டி சொல்லாமல் உடனே கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் கள். இன்று நான் வரச் சற்று நேரமாகுமென்று எனக்கு முன்னலேயே தெரியு மாதலாலும், அவர்கள் வங் தவுடன் எவ்விதத் தாமதமும் அன்னியில் கொடுக்க வேண்டு மென்று கேட்டுக்கொண்டதலுைம், தங்கள் உத்தரவிற்கு மாருக நேற்றே 5 லகத்துக்கு கோட்டுகளே வாங்கும்படி நேர்ந்தது. நேற்றுச் சாயங்காலம் நான் நோட்டுகளே எடுத்து வைத்துப் பூட்டும்போது நமது காவற்காரன் அருகே இருந் தான். நான் பூட்டுப் போட்டு ஆனவுடன் பூரீமான் ராகவன் வந்து அவர் பூட்டைப் பூட்டினர்.அப்பால் அவரே எழுத்துப் பூட்டையும் பூட்டினர். உடனே நான் வெளியே சென்றேன். இங்கே களவுபோன விஷயத்தைப்பற்றி எனக்குத் தெரியவே தெரியாது. என் புத்திக்கு எட்டியவரை எவ்விதமாகத் தீர் மானிக்கவும் கூடவில்லை என்று சொல்லிக்கொண் டிருக் கும்போதே சேவகன், ஒரு கனவான் அவசரமாய்ப் பங்காளி களில் ஒருவரைப் பார்க்க விரும்புவதாய்ச் சொன்னன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இராஜேந்திரன்.pdf/92&oldid=660472" இலிருந்து மீள்விக்கப்பட்டது