பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

105

கொண்டது போல் திரிசிரபுரம் அரண்மனையில் நாட்களைக் கடத்தினார்கள் அவர்கள்.

சின்ன முத்தம்மாளின் அர்த்தமற்ற பிடிவாதமாகிய கணவனோடு உடன்கட்டை ஏறுவது என்பதைத் தடுத்து நிறுத்திவிட்டாலும் கர்ப்பிணியாகிய அவள் தற்கொலை செய்து கொண்டுவிடுவாளோ என்ற பயம் இன்னும் ராணி மங்கம்மாளுக்கு இருந்தது. தொடர்ந்து சின்ன முத்தம்மாள் விரக்தியோடு தானிருந்தாள். அவளுடைய வேதனை ஒரு சிறிதும் தணிந்ததாகத் தெரியவில்லை. இந்த நிலையில் வயிறும் பிள்ளையுமாக இருக்கும் அவளை அரண்மனையில் ஒரு கணமும் தனியே விடாமல் கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது. சோக மிகுதியில் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவள் எதுவும் செய்து கொண்டுவிடக் கூடாதே என்று பயந்தாள் ராணி மங்கம்மாள்.

அம்மை கண்டு இறப்பதற்கு முன் மகன் ஆட்சி நடத்திய ஏழாண்டுக் கால வாழ்வை மீண்டும் நினைத்தாள். அவனுடைய அருங்குணங்கள் ஒவ்வொன்றாக நினைவு வந்தன. இப்படி ஒரு பெரிய பொறுப்பில் இல்லாமல் ஒரு நாட்டுப் புறத்துத் தாயாக இருந்தாலாவது ஒப்பாரி வைத்து அழுது துயரைத் தணித்துக்கொள்ள முடியும் என்று தோன்றியது ராணி மங்கம்மாளுக்கு ரங்ககிருஷ்ணன் செய்திருந்த தான தர்மங்களும், கட்டிய கோயில்களும் நினைவுக்கு வந்தன. அந்தணர்க்குத் தானமாக அளித்த சிற்றூர்களும், மக்கள் பசிப்பிணி தீர அங்கங்கே கட்டிய சத்திரம் சாவடிகளும் ஞாபகம் வந்தன. எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் அரண்மனையிலேயே வளர்ந்த சின்ன முத்தம்மாளை மணந்து அவளோடு ஏகபத்தினி விரதனாக அவன் வாழ்ந்த வாழ்க்கை நினைவுக்கு வந்தது. விருப்பு வெறுப்பில்லாமல் திரிசிரபுரத்தில் கிறிஸ்தவர்களின் நிலங்களை அவர்களுக்கு அளிக்குமாறு அவன் நீதி வழங்கியது நினைவுக்கு வந்தது.

பதவியேற்று முடிசூடிய புதிதில் மறவர் சீமையின்மேல் படையெடுத்துச் சென்று வெற்றி பெறாமல் திரும்பியிருந்தாலும் பின்னர் தன் தந்தை சொக்கநாத நாயக்கர் காலத்தில் இழந்த