பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

37

"நீ சிறு குழந்தையாயிருந்த வரை உன்னைத் தாலாட்டிச் சீராட்டிப் பாலூட்டித் தூங்கச் செய்வது மட்டும்தான் என் கடமையாயிருந்தது மகனே!"

"இப்போது இன்னும் நான் குழந்தையில்லை அம்மா ஆகவே இப்போது நீங்கள் விழிப்பூட்ட வேண்டுமேயன்றித் தூங்கச் செய்யக்கூடாது."

"பிரமாதமான வார்த்தை முத்துவீரப்பா ஆனால் இன்னும் நீ குழந்தையில்லை என்பதை நீ உணர்ந்தால் மட்டும் போதாது. உன் எதிரிகளும் உணரவேண்டும்."

"முதல் எதிரியாக என் முன் எதிர்ப்பட்ட டில்லி பாதுஷா ஒளரங்கசீப்பின் பிரதிநிதிக்கு அதை நான் நன்றாக உணர்த்தி விட்டேன். இன்னும் வேறு யாருக்காவது அதை உணர்த்துவதற்கு அவசியமிருந்தால் சொல்லுங்கள் ஐயா உணர்த்துகிறேன்.”

"அவசியம் நேற்றுவரை ஏற்படவில்லை, இன்று இப்போது இதோ ஏற்பட்டிருக்கிறது.'

"சற்றே விவரமாகச் சொல்லுங்கள் எங்கே யாரிடம் அந்த அவசியம் ஏற்பட்டிருக்கிறது?"

"எதிரிகளைவிடத் துரோகிகள் மோசமானவர்கள்."

"யார் அந்தத் துரோகிகள்?"

"இந்த அரண்மனை கடந்த காலத்தில் கண்ட துரோகி அழகிரிநாயக்கன். இன்று காணும் துரோகி கிழவன் சேதுபதி என்ற இரகுநாத சேதுபதி அன்று உன் தந்தை சொக்கநாத நாயக்கரின் உத்தரவுப்படி அவர் அரசாள தஞ்சையை ஆளச்சென்ற அழகிரி நாயக்கன் உன் தந்தைக்குத் துரோகம் செய்து பின்பு வெங்கண்ணாவின் சூழ்ச்சியால் தானும் சீரழிந்து போனான். அதேபோல் உன் தந்தை சொக்கநாத நாயக்கரிடம் பணிந்து சிற்றரசனாக இருந்த கிழவன் சேதுபதி இப்போது தான்தோன்றித் தனமாக நடந்து கொள்ளத் தொடங்கி விட்டார். முன்பு உன் தந்தைக்கும் ருஸ்டம்கானுக்கும் போர் ஏற்பட்டபோது இந்தக்கிழவன்